moe.gov.lk

Articles

6 வது தடவையாக நடைபெற்ற ‘தேசிய மட்ட பாடசாலை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப வாகையர்-2014’ போட்டியின் பரிசளிப்பு விழா கௌரவ கல்வி அமைச்சர் தலைமையில் இடம் பெற்றது.

6 வது தடவையாக நடைபெற்ற ‘தேசிய மட்ட பாடசாலை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப வாகையர்-2014’  போட்டியில் 2014 ம் ஆண்டுக்கான இளம் கணினி விஞ்ஞானிகளாக சிரேஷ்ட பிரிவில் கொழும்பு ஆனந்தா வித்தியாலய மாணவர்களான பசிது சத்துரங்க மற்றும் சரித் விக்கிரமசிங்க ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். கனிஷ்ட பிரிவில் கண்டி மாதிரி வித்தியாலய மாணவர் ஆர். ஏ. ஹசான் சாமர ராஜபக்‌ஷ வெற்றி பெற்றுள்ளார். 2014 ம் ஆண்டு தேசிய மட்டத்தில் பாடசாலை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப வாகையர் போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றவர்களாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்றுள்ளார்கள்.

தேசிய பாடசாலை மென்பொருள் போட்டி
17 வயதுக்குக் கீழ் வெற்றி பெற்றவர்கள்

  • மூன்றாம் இடம் – திசிர தொடங்கொட – றோயல் கல்லூரி, கொழும்பு
  • இரண்டாம் இடம் – ரமித் உதார ஹெட்டியாராச்சி – ஆனந்தா வித்தியாலயம், கொழும்பு
  • முதலாம் இடம் – விதாரமலாகே முதின் நிர்மல விதாரம – எகலியகொடை, ம. ம. வி., இரத்தினபுரி.

19 வயதுக்குக் கீழ் வெற்றி பெற்றவர்கள்

  • மூன்றாம் இடம் - ஜாகொடகே சந்திப தர்சன வீரசிங்க - றோயல் கல்லூரி, கொழும்பு
  • இரண்டாம் இடம் – நிசல் பெரியப்பெரும – டீ. எஸ். சேனாநாயக்கா வித்தியாலயம், கொழும்பு
  • முதலாம் இடம் – தொன் ஜூட் சாமிக றொசனல் லிகினிகடுவ - றோயல் கல்லூரி, கொழும்பு

YCS வெற்றியாளர்கள் - 2014
கனிஷ்ட பிரிவில் தேசிய மட்டத்தில் வெற்றியாளர்கள்

  • மூன்றாம் இடம் - ஆர். ஏ. ஹசான் சாமர ராஜபக்‌ஷ - கண்டி மாதிரி வித்தியாலயம், பொல்கொல்லை.
  • இரண்டாம் இடம் – டீ.எம். சந்தீப திசாநாயக்க – புனித சில்வெஸ்டர் வித்தியாலயம், கண்டி.
  • முதலாம் இடம் – எஸ். எம். எம். றுக்சான் ஜே. சேனாநாயக்க – புனித அன்னம்மாள் வித்தியாலயம், குருணாக்கல்

சிரேஷ்டபிரிவில் தேசிய மட்டத்தில் வெற்றியாளர்கள்

  • மூன்றாம் இடம் – ரேணுகா பியுமால் பெர்ணான்டு – பண்டாரகமை ம. ம. வி., பணடாரகமை.
  • மூன்றாம் இடம் – சத்துரிகா சந்தமாலி பெர்ணான்டு, பண்டாரகமை ம. ம. வி., பணடாரகமை.இரண்டாம் இடம் – மொகமட் முசம்மில் அசிம் – பதுரியா ம. ம. வி., மாவநெல்லை.
  • இரண்டாம் இடம் – டப். பிரவீன் கே. பெர்ணான்டு – புனித செபஸ்தியார் விதிதியாலயம், மொறட்டுவை.
  • முதலாம் இடம் – பசிது சத்துரங்க விஜேசேன – ஆனந்தா வித்தியாலயம், கொழும்பு.
  • முதலாம் இடம் – சரித் விக்கிரமசிங்க – ஆனந்தா வித்தியாலயம், கொழும்பு.
  • இரண்டாம் இடம் -  டீ. எம். சந்தீப திசாநாயக்கா.

ஆக்கத்திறனுடை ஆசிரியர் போட்டி

  • இரண்டாம் இடம் – ஐ. டீ. எஸ். கே. ராஜபக்‌ஷ – விலயாய மத்திய மகா வித்தியாலயம், பொலந்நறுவை
  • முதலாம் இடம் – ஆர். எம். ஐ. கே. ஜயசிங்க –   கேகாலை வித்தியாலயம், கேகாலை

கல்வி அமைச்சினால் 2009 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டி கல்வி மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப கிளையின் ஏற்பாட்டில் தகவல் மற்றும்  தொடர்பாடல் தொழினுட்ப பாடங்களுக்காக பாடசாலை மட்டத்தில் நடாத்தப்படும் ஒரேயொரு உத்தியோக பூர்வ போட்டியாகும். இலங்கை தகவல் தொழினுட்ப தொழிற்றுறையினரின் சபை (FITIS) மற்றும் இலங்கை கணினி சமூகத்தினால் (CSSL) 2009 ம் ஆண்டு வரை வெவ்வேறாக நடாத்தப்பட்ட போட்டியானது 2009 ம் ஆண்டு முதல் கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய மட்ட போட்டியாக இணைந்து செயற்படுவது சிறப்பாகும்.

அதற்கு அமைய மாணவர்களின் பொருட்டு நடாத்தப்படும் ‘இளம் கணினி விஞ்ஞானிகள்’ (Young Computer Scientists)  போட்டி, ஒன்லைன் (online) போட்டி அதுபோல ஆசிரியர்கள் மற்றும் கல்விக் கல்லூரிகளில் பயிற்சி பெறும் கற்பித்தற்கலை டிப்ளோமா பாடநெறியை மேற்கொள்ளும் மாணவர்களுக்காக நடாத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களைக் கௌரவித்துப் பரிசளிக்கும் விழா 2015 – 04 - 22 ம் திகதி மு. ப. 10. 00 மணிக்கு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் தலைமையில் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்ச்சியில், கல்வி அமைச்சின் செயலாளர் திரு உபாலி மாரசிங்க, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்களான திரு எச். யூ. பிரேமதிலக்க (கல்வித் தர மேம்பாடு), திருமதி ஆர். எம். சி. எம். ஹேரத் (கல்விச் சேவை நிறுவனம்), தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக் கிளைக் கல்விப் பணிப்பாளர் திரு ஜி. எம். நீல் குணதாஸ, உள்ளிட்ட கல்வி அமைச்சு அலுவலர்களும் இலங்கை கணினி சமூகத்தின் (CSSL) தலைவர் மருத்துவக் கலாநிதி தயான் ராஜபக்‌ஷ, இலங்கை தகவல் தொழினுட்ப தொழிற்றுறையினரின் சபையின் (FITIS) தலைவர் திரு அப்பாஸ் கமுர்தீன், மென்பொருள் அலகின் தலைவர் திரு சிந்தக விஜேவிக்ரம உள்ளிட்ட அலுவலர்களும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப அபிவிருத்தி தொடர்பில் ஈடுபாடுள்ள தனியார் நிறுவனங்களின் நிறைவேற்று அலுவலர்களும் உள்ளிட்ட பல விசேட அதிதிகள் கலந்து கொண்டனர்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.