moe.gov.lk

Planning & Performance Review

 44


மேலதிகச் செயலாளர்
திட்டமிடல் மற்றும் செயலாற்றுகை மீளாய்வுப் பிரிவு
(3 ம் மாடி)

 

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
  மேலதிகச் செயலாளர் 011-2785874 1338 011-2785874 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

தனியார் பாடசாலைகள் கிளை

 


தனியார் பாடசாலைகள் கிளை (1ம் தளம்)

 

 


நோக்கக் கூற்று :

இலங்கையின் புகழை பன்னாட்டு மட்டத்தில் மேம்படுத்தல், உண்ணாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கும் குடிமக்கள் பரம்பரையை எதிர்காலத்துக்கு அளித்தல்.

பணிக்கூற்று
தனியார் பாடசாலைகளின் கொள்கையை சான்றுபடுத்தல் ஊடாக தரமான கல்வி வழங்குவதற்கு உதவுதல். தாய் நாட்டுப் பிள்ளைகள் அதிகபட்ச கல்விப் பயனைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை வகுத்தல்.


கிளையின் பணிகள்

  • அரச அனுமதி பெற்ற பாடசாலைகளில் ஆசிரிய நிறுவனக் கடமைகள்.அனுமதி பெற்ற பாடசாலைகளில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல் வழங்கல்.
    • ஆசிரிய நியமனத்தை அனுமதித்தல்
    •  ஓய்வூதியம் பெறுவதை அனுமதித்தல்
    •  வெளிநாட்டு விடுப்பு, கல்வி விடுப்பு, மருத்துவ விடுப்பு அனுமதித்தல்
    • சேவை நீடிப்பு அனுமதித்தல்
    •  உத்தேச ஆசிரியர் எண்ணிக்கையை அனுமதித்தல்.
  • தனியார் பாடசாலைகளை மேற்பார்வை செய்தல் மற்றும் தேவையான போது கண்காணிப்பு செய்தல்.
  •  அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்குத் தேவையான ஒழுங்குவிதிகள், அறிவுறுத்தல்களைத் தயாரித்தல் ( சுற்றறிக்கைகள், அறிவுறுத்தல் கடிதங்கள்)
  •  வெளி நிறுவனங்களுடன் தனியார் பாடசாலைகள் அபிவிருத்திக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  •  பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது எழும்பும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிவுரைகள் வழங்கல்.
  • இலங்கை முழுதும் இருக்கும் பன்னாட்டுப் பாடசாலைகளை ஒழுங்கமைப்பு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை வழங்கல்.

 

அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
கல்விப் பணிப்பாளர் 011-2786013 1195  011-2786013 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
உதவிக் கல்விப் பணிப்பாளர்.   1154    
  011-2786013       

இலங்கை யுனெஸ்கோ தேசிய ஆணைக்குழு

 


செயலாளர் நாயகம்
இலங்கை யுனெஸ்கோ தேசிய ஆணைக்குழு  (5 ம் மாடி)

 

 

 

நோக்கக்கூற்று
ஐக்கிய நாடுகளின் கொள்கைகளுக்கு ஊடாக நாட்டினம், பால், மொழி, சமய வேறுபாடின்றி உலக மக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட நீதி, சட்டம், நிர்வாகம், மனித உரிமை மற்றும் அடிப்படைச் சுதந்திரம் என்பவற்றுக்காக, உலகின் மதிப்பு மேலும் மேலோங்கச் செய்வதற்காக, கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்பாடல் ஊடாக நாடுகளுக் கிடையில் ஒற்றுமையை வளர்ப்பதற்காக ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு (கல்வி, விஞ்ஞான, கலாச்சார) அமைப்பின் (UNESCO) வேலைத் திட்டங்களில் பங்கேற்பதன் வாயிலாக மனித வர்க்கத்தின் அமைதி, பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் நலனோம்புப்  பணிகளுக்குப் பங்களிப்புச்  செய்தல்


பணிக்கூற்று
யுனெஸ்கோவின் முழுக் கோட்பாடுகளுக்கும் பங்களிப்புச் செய்வதற்காக தேசிய நடுநிலையமாகச் செயல் படல்

பணிகள்

  • தலைமை அலுவலகம் ஊடாக செயல் படுத்தப்படும் கல்வி, அறிவியல், பண்பாட்டு ஊடகம், சமூக அறிவியல் மற்றும் சுற்றாடல் போன்ற துறைகளின் குறிக்கோள்களை அடையும் பொருட்டு உரிய  அமைச்சுகளுடன் இணைந்து செயல்படல், அமைதியும் நிலையான வளர்ச்சியும் ஏற்படுத்துவதற்காக  அரச மற்றும் அரச்சார்பற்ற நிறுவனங்கள், யுனெஸ்கோவுடன் இணைந்து பணியாற்றும் பல நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து யுனெஸ்கோவின் குறிக்கோள்களை அடைவதற்கான செயற்பாடுகளில் ஈடுபடல்
  • தேசிய மற்றும் பன்னாட்டுப் பாடசாலைகளில் யுனெஸ்கோ வேலைத் திட்டங்களை மேற்கொள்ளல்
  • யுனெஸ்கோ மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து மாநாடுகள், பயிற்சிச் செயலமர்வுகள் தேசிய மற்றும் பன்னாட்டு மட்டத்தில் நடாத்த நடவடிக்கை மேற்கொள்ளல்
  • யுனெஸ்கோ செற்றிட்டம் தொடர்பான செயற்பாடுகளை மேம்படுத்த தேவையான நிதியைப் பெறுவதற்கு ஆவன செய்தல்


 அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல்
நேரடி இடைத்தொடர்பு
கல்வி அமைச்சர் – கௌரவ தலைவர் 011-2784832 1333  
செயலாளர், கல்வி அமைச்சு நிரந்தர துணைத் தலைவர் 011-2784811 1336  
செயலாளர் நாயகம் 011-2177006 1505  011-2177006
கணக்காளர் 011-2784834 1503  
 கிளை 011-2177002/
2177027
1500 011-2177007

 

 

 

யாவருக்கும் கல்வி, ஆயிரமாமாண்டு வளர்ச்சிகாண் திறமுறை மற்றும் திட்டமிடல் கிளை

 


யாவருக்கும் கல்வி, ஆயிரமாமாண்டு வளர்ச்சிகாண் திறமுறை மற்றும் திட்டமிடல் கிளை
(3 ம் மாடி)

 

 


நோக்கற்கூற்று
ஜோம்தியான் (1990) மற்றும் டாகா (2000) நடைமுறை வரைவுத் திட்டங்கள் 2005 ம் ஆணடளவில் யாவரும் கல்வியை அடைவதற்கான இலக்குகள், குறிக்கோள்கள் மற்றும் திறமுறைகளை முன்மொழிந்துள்ளன. அந்த ஆறு இலக்குகளையும் அடைவதற்குத் தேவையான கொள்கைகளைத் திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தலே யாவருக்கும் கல்வி கிளையின் பொறுப்பாகும்.

 

பணிக்கூற்று
யாவருக்கும் கல்வி இலக்குகளுக்கு அமைவாக தேசிய இலக்குகள், கொள்கைகள் மற்றும் திறமுறைகளைத் தீர்மானிப்பதற்கு குறித்த தரப்பினருடன் இணைந்து திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புகளை மேற் கொள்ளல்.

 

பணிகள்

 

  • வறுமையை ஒழித்தல் மற்றும் வளர்ச்சித் திறமுறைகளுடன் தொடர்புபட்டுள்ள, நிலையான, நன்கு ஒன்றிணைக்கப்பட்டுள்ள கல்வித் துறைசார் வரைவுத் திட்டத்துக்குள் யாவருக்கும் கல்விக் கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களை மேம்படுத்தல்.
  • யாவருக்கும் கல்வி இலக்குகளில் மீள் கவனம் செலத்துவதற்கு வாய்ப்பளித்தல் மற்றும் யாவரும் சிறந்த வாழ்நாள் கல்வி கற்றலுக்கான வாய்ப்பளிக்கும் முயற்சிகளை மீளெழுச்சியூட்டுதல் என்பவற்றுக்காக யாவரும் கல்வி இலக்குகளை அடைவதில் தொடர்பு பட்டுள்ள ஏனைய அமைச்சுகள் மற்றும் கல்வி அமைச்சின் ஏனைய கிளைகளுடன் சீரான ஒருங்கிணைப்பினை மேற் கொள்ளல்.
  • தேசிய, மாகாண மற்றும் வலய இலக்குகள் மற்றும் யாவருக்கும் கல்வியின் ஆறு குறிக்கோள்கள் ஆகியவற்றை அடைதல் என்பவற்றைக் கண்காணிப்பதில் ஏற்படும் முன்னேற்றங்கள் மற்றும் இடைவெளிகளை மதிப்பீடு செய்தல்.
  • 2015 ல் யாவருக்கும் கல்வி குறிக்கோள்களை அடைவதற்கான தேசிய திட்டங்களைக் கண்காணித்தலின் போது அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் மற்றும் விடயங்கள் என்பனவற்றுக்கான நடவடிக்கை மற்றும் திறமுறைகளை ஒன்றிணைத்தல்.
  • யாவருக்கும் கல்வி தொடர்பான கல்விப் புள்ளி விபரங்கள் மற்றும் சுட்டிகளில் கொள்திறனை மேம்படுத்தும் இலக்குகளைக் கண்காணிப்பதற்கு தேசிய, மாகாண மற்றும் வலயங்கள் ஊடாக தொழினுட்ப ஒத்துழைப்பை வழங்கல்.
  • யாவருக்கும் கல்விக் குறிக்கோள்களை நடைமுறைப் படுத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கும் உரிய கொள்கை வரைவுத் திட்டத்தினை வளர்ச்சிப்படுத்தல் அத்துடன் அவற்றை கல்விப்புல வளர்ச்சிச் சட்டகம் மற்றும் வேலைத் திட்டத்துடன்.(ESDFP) தொடர்பு படுத்தல்.

அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல்
நேரடி இடைத்தொடர்பு
கல்விப் பணிப்பாளர் 011-2787136 1334 011-2787136 
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1345  
 கிளை 011-2787136 1330  

புள்ளிவிபரக் கிளை

 


புள்ளிவிபரக் கிளை  (3 ம் மாடி)

 



பணிக்கூற்று

கல்வி அமைச்சின் பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் அதன் பின்னர் விபரங்கள், உசாவுதல் போன்ற வற்றுக்காவும் தேவையா ன பொதுக் கல்வித் தகவல்களைத் திரட்டுதல், தற்காலப் படுத்திச் செல்லல் மற்றும் தொடர்பான தரப்பினர்க்குப் பெற்றுக் கொடுத்தல்

பணிகள்

  • அரசுப் பாடசாலைகளில் ஆண்டுக்கான தொகை மதிப்புக் கணக்கெடுத்தல்
  • அதே வேளை தனியார் பாடசாலைகள், பிரிவேனாக்கள், கல்விக் கல்லூரிகள், ஆசிரியர் கல்லூரிகள், முறைசாரா கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிலும் கணக்கெடுப்பினை மேற்கொள்ளல்
  • தீவு முழுவதற்குமான கல்வி பற்றிய தகவல் முறைமையை இயக்குதல்
  • அமைச்சின பல்வேறு பிரிவுகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு தகவல்கள் திரட்டி வழங்கல்
  • கல்வி தொடர்பான சுட்டியைத் தயார் செய்தல்
  • குடிமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்துடன் தொடர்பு பேணல்
  • சிறப்புத் தேவையை முன்னிட்டு குடிமதிப்பு, ஆய்வு இடம் பெறச் செய்தல்

 

 
அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
சிரேஷ்ட குடி மதிப்பாளர் 011-2785566 1332 011-2785566  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
குடிமதிப்பாளர்   1339    
குடிமதிப்பு அலுவலர்   1378    
குடிமதிப்பு அலுவலர்   1340    
குடிமதிப்பு அலுவலர்    1340    
 கிளை 011-2785566 1332    
44

கொள்கை மற்றும் திட்டமிடல் கிளை


கொள்கை மற்றும் திட்டமிடல் கிளை (3 ம் மாடி )

 

 Education Sector Development Framework and Programme – II (ESDFP-II): 2012-2016

நோக்கக்கூற்று
இலங்கை பொதுக் கல்வி முறைமையில் சமத்துவம்(equity), பண்பு (தரம் quality) மற்றும் செயற்றிறனை (efficiency) உறுதிப்படுத்தம் கொள்கை அத்துடன் அதற்கேற்ற திட்டப் பண்பாடு

 
பணிக்கூற்று

பொதுக் கல்வி முறைமை தொடர்பான அரச கொள்கையின் அடிப்படையில் உருவான கொள்கைகளை ஆராய்ந்து அவற்றின் சமத்துவம்,. தரம் மற்றும் செற்றிறனை உறுதிப் படுத்தும் பொருட்டு முறைமைக்கான செயற்பாட்டு கொள்கையை அடையாளம் கண்டு, அக்கொள்கையில்  கட்டியெழுப்பப்பட்ட  முறைமையின்  உயர் நிலையை  அடைவதற்காக  நீண்டகால, இடைக்கால திறமுறைத் திட்டத்திலான வேலைத் திட்டங்கள் மற்றும் செயற்றிட்டங்கள் வகுத்தல், அவை செயல்பட உதவுதல்


பணிகள்

  • நடைமுறையிலுள்ள கல்விக் கொள்கையை ஆராய்தல், பகுத்தாய்தல்

பொதுக் கல்வி முறைமையில் சமத்துவம், தரம் மற்றும் செயற்றிறன் தொடர்பாக  நிலவும் கொள்கையை மேம்படுத்தல்,      அவற்றை பொதுமைப் படுத்தலுக்கும், அதற்கேற்ற  திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், பிரதானமாக நிலவும் சமச் சீரின்மையை அகற்றுவதற்குமான கொள்கை  ஆய்வுசெய்தல்

  • பொதுக் கல்வி முறைமைக்காக  இடம்பெறும் முதலீட்டை உயர்த்து வதற்குத் தேவையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்பாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் வெளிநாட்டு உதவி பெற்றுக் கொள்ளல் அத்துடன் முதலீடு செய்தல் தொடர்பாக பொதுவான  விரிவான கொள்கை தயாரித்தல்,  திட்டமிடப்பட்ட மேலதிக ஒதுக்கீட்டு நிதியை முதலீடு செய்தல் பற்றிய கொள்கையை வகுத்தல்கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இயங்கும் கொள்கைத் திட்டமிடல் பரிந்துரைக் குழு செயல்பட உதவுதல்
  • பாடசாலைகளுக்கு வளங்கள் ஒதுக்குதல் பற்றிய செயற்பாடுகள், பாடசாலைக் கட்டமைப்பு தொடர்பாக முடிவு செய்யும் விதிமுறைகளை மேம்படுத்தல், மற்றும் செயற்றிறன் மிக்க பாடசாலை வலைப் பின்னலைப் பேணல
  • பாடத்திட்டக் கொள்கை, பரீட்சைக் கொள்கை  மற்றும் மாணவர் செயற்பாட்டுத்  திறனை  உயர்த்துவதற்பான செயற்பாட்டுக் கொள்கை போன்றவற்றைத் தயாரித்தல் தொடர்பாக பாடத்துக்குப் பொறுப்பான  பணிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்குதல்
  • பிள்ளைகளின் கற்றல் ஆற்றலை மிகவும் வெற்றிகரமானதாக ஆக்கும்   விதத்தில் நம்பகத் தன்மையை அடையாளம் காண்பதற்கான பொருத்தமான கொள்கை ஆய்வுத் தேவைப்பாடு தொடர்பான  பரிந்துரையை முன்வைத்தல் (அமைச்சின் ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டுக் கிளைக்கு, பல்கலைக் கழகங்களுக்கு மற்றும் தேசிய  கல்வி நிறுவனத்துக்கு)
  • கல்வி முறைமையில் சேவைகள் வழங்கல் தொடர்பான நிலைமை மற்றும் அது பற்றிய கொள்கை  மாற்ற மடைதலை அடையாளம் காணும் பொருட்டு பயனாளிகளின் கருத்துகள் மற்றும் முன் மொழிவுகளை பெற்றுக் கொள்ளல் தொடர்பான  திறமுறைகளைத்  தயாரித்தலும் நடைமுறைப்படுத்தலும்
  • அரச கொள்கை விளக்கம் மற்றும் தேசிய கல்விக் கொள்கைக் குழுக்களின் கொள்கை, சட்டவரம்பு மற்றும் கல்வி அமைச்சினூடாக அடையாளம் காணப்பட்ட கொள்கையை மையமாகக் கொண்டு, கல்வி முறைமையின் உயர்வைக் கருத்தில் கொண்ட நீண்ட கால, இடைக்கால மற்றும் குறுங்கால திறமுறைகளைத் திட்டமிட்டு  வழங்குதல் (தேசிய மற்றும் மாகாண கல்வி நிறுவனங்களுடன் இணைந்து)
  • கல்வி முறைமைக்காகக்  கிடைக்கப்பெறும், கிடைக்க விருக்கும் முன் மொழியப் பட்டுள்ள வெளிநாட்டு உதவி முறையாகவும் உச்ச செயற்றிறனுடனும் முதலீடு செய்யப் படுவதற்காக, பிரிவுகளின் வளர்ச்சியின் ஊடாக, இவ்வாறு தேவைப்பாடு கருதி, செயற்றிட்டங்கள்  வாயிலாகச் சிறப்பான திட்டத்தினை வழங்கல்
  • கல்வி அமைச்சின் இடைக்கால மற்றும் ஆண்டுக்கான செயற்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்தல்
  • திட்டம் வழங்கல் செயற்பாட்டிற்கு வழிகாட்டலைப் பெற்றுக் கொள்வதற்காக நிலவும் தரவுகளை அறிவடிப்படையிலான முறையில் ஆய்வு செய்தல், செயல் படுத்தல், அத்துடன் அது தொடர்பான தொழினுட்பத்  திறமுறையைப் பயன்படுத்தலைப் பிரபலப்படுத்தல்
  • கல்விக் கொள்கை, திட்டம் மற்றும் வேலைத் திட்டம் தயாரிக்கும் போதும் செயற் படுத்தும் போதும் தேசிய மாணவர் அடைவு மட்டத்தை மதிப்பிடல், பல்கலைக் கழகத்துடன்  இணைந்து செயல்படல், அது தொடர்பான முடிவுகளின் படி முறைமைக்கு விளக்குதல்
  • வழங்கல் திட்டம் செயல்படுத்தப் படும்போது, தேவையான பங்களிப் பாளர்களுக்கு  ஒத்துழைப்பு வழங்கல், அத் திட்டங்கள் குறித்த காலத்துக்குள் நிறைவேற்றப் படல், மற்றும் தேவைக் கேற்ப மாற்றங்கள், மேம் படுத்தல்கள் மேற் கொள்ளல் தொடர்பாக அமைச்சின் செயலாற்றுகை மீளாய்வு மற்றும் கண்காணிப்புக்  கிளையுடன் இணைந்து செயல்படல்

 
அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல்
நேரடி இடைத்தொடர்பு
கல்விப் பணிப்பாளர் 011-2786182 1327 011-2786182 
பிரதிக் கல்விப் பணிப்பாளர்   1329  
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1377  
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1357  
உதவிக் கல்விப் பணிப்பாளர்      
 கிளை 011-2786182 1377/1389/1328  

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.