moe.gov.lk

Primary Education Branch

கல்வி அமைச்சின் ஆரம்பக் கல்விக் கிளையினால் முன்னெடுக்கப்பட்டு ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர்களினால் செயற்படுத்தப்பட்ட செயல்நிலை ஆய்வூ அறிக்கைகள் (தமிழ் மொழி மூலம்)

ஆரம்பக் கல்விப் புலத்தில் செயலாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களின் தொழில் வாண்மையை விருத்தி செய்வதற்கு சிறந்த ஊடகமாக இருப்பது செயல் நிலை ஆய்வூகளாகும். இங்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் தமது செயலாற்றல் வகிபங்கு தொடர்பாக ஆழமாகத் தேடிப்பார்த்தல் மற்றும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட விடயங்கள் தொடர்பாக புதிய நோக்குகளை அடைவதன் மூலம் அவர்களின் இயலுமை விருத்தி அடைகிறது. பாடசாலை மட்டத்தில் மாணவர்களின் கல்விக்காக நேரடியாகப் பங்களிப்புச் செய்கின்ற ஆசிரியரின் செயற்பாடுகளுக்கு வசதியளித்தல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல் ஆசிரிய ஆலோசகர்களின் செயற்பாடுகளாகும். இந்த ஆசிரிய ஆலோசகர்களின் வகிபங்கினை விருத்தி செய்வதற்காக செயல்நிலை ஆய்வூகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருவது மிக்க அவசியமாகும். ஆகவே கல்வி அமைச்சின் ஆரம்பக் கல்விக் கிளையினால் செயல் நிலை ஆய்வூ தொடர்பாக அறிவூ+ட்டம் செய்து சகல மாகாணங்களிலிருந்தும் தெரிவூ செய்யப்பட்ட தமிழ் மொழி மூல ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர்கள் குழுவினர் செயல் நிலை ஆய்வூகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

செயல் நிலை ஆய்வூகளை நடைமுறைப்படுத்துவதன் நோக்கம்

1. ஆரம்பக் கல்வியின் தர விருத்திக்காக பிள்ளைகளின் பல்வகைமையை உணர்ந்து அப் பல்வகைமைகளுக்குப் பொருத்தமான வழிமுறைகளை கற்றல் கற்பித்தற் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தும் திறன்களை விருத்தி செய்தல்.

2. ஆரம்பக் கல்வியில் ஈடுபடும் பல்வேறுபட்ட குழுவினரதும் தொழில் சார் திறன்களை விருத்தி செய்வதன் மூலம் மாகாண நிலையிலான பயிற்றுனர் குழுவொன்றை உருவாக்குதல்.

3. ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டவற்றை வலுப்படுத்துவதன் மூலம் ஆரம்பக் கல்வியில் கண்டறியப்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக மாற்று வழிகளைக் கையாள்வதற்கு ஆரம்பக் கல்வி ஆசிரியர்களை ஈடுபடுத்துதல்.

4. சிறுவர் நேயப் பாடசாலைகள் அணுகுமுறையை வலுப்படுத்தல்.

கல்வி அமைச்சின் ஆரம்பக் கல்விக் கிளையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இவ் வேலைத்திட்டத்திற்காக கொழும்புப் பல்கலைக் கழகம் மற்றும் திறந்த பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் மற்றும் சிரேஷ்ட விரிவூரையாளர்களின் உயர் பங்களிப்பு பேருதவியளித்தது.

வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட முறைகள்:-

  • தெரிவூ செய்யப்பட்ட ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர்களுக்கு செயல் நிலை ஆய்வூ தொடர்பாக அறிவூ+ட்டம் செய்து செயல் நிலை ஆய்வூகளில் ஈடுபடுத்தல்.
  •  செயல் நிலை ஆய்வூகளை மேற்கொள்ளும்போது பெற்றுக்கொண்ட அனுபவங்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குதல்.
  • ஆய்வறிக்கைகளை எழுதுவதற்கான சிறந்த மொழி நடை மற்றும் பொதுவான வழுக்கள் தொடர்பாக விளக்கங்கள் வழங்குதல்.
  • ஆய்வறிக்கை தயாரிப்பதற்கான மாதிரிக் கட்டமைப்புக்கள் தொடர்பாக அறிவூறுத்துதல்.
  • ஆய்வறிக்கைகளில் உருக்கள் மற்றும் அட்டவணைகள் உள்ளடக்கப்படவேண்டிய முறைகள் தொடர்பாக அறிவூ+ட்டுதல்.
  • தயாரிக்கப்படட்; ஆய்வறிக்கைகளை முன்வைத்தல் மற்றும் திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்கள் செய்யப்பட்டு ஆய்வறிக்கையின் இறுதிப் பிரதியைத் தயாரித்தல்.

வெற்றிகரமாக செயல்நிலை ஆய்வூகளில் ஈடுபட்ட ஆசிரிய ஆலோசகர்களின் ஆய்வறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அவற்றுள் சிறந்த மட்டத்திலுள்ள 09 ஆய்வறிக்கைகள் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்வதற்காகத் தெரிவூ செய்யப்பட்டுள்ளன.

செயல் நிலை ஆய்வூ வேலைத்திட்டம் தொடர்பாக ஒத்துழைப்புக்கள்

வழிகாட்டுதல்கள்
ஏ.எஸ். ஹேவகே – மேலதிகச் செயலாளர் (பாடசாலை அலுவல்கள்) – கல்வி அமைச்சு

வள ஒத்துழைப்பு

  • பேராசிரியர் ஆ.கருணாநிதி அவர்கள் (ஓய்வூ பெற்ற) – கொழும்புப் பல்கலைக்கழகம்
  •  பேராசிரியர் வூ.தனராஜ் அவர்கள் (ஓய்வூபெற்ற) - திறந்த பல்கலைக்கழகம்இ நாவல
  • கலாநிதி கு.ஆ.நவாஸ்டீன் அவர்கள் - திறந்த பல்கலைக்கழகம்இ நாவல
  • சிரேஷ்ட விரிவூரையாளர் P. இரமதாஸ் அவர்கள் - திறந்த பல்கலைக்கழகம்இ நாவல

ஏற்பாடு

பி.எம்.ஏ.எஸ்.பண்டிதசேகர அவர்கள்-கல்விப் பணிப்பாளர்இ ஆரம்பக் கல்வி – கல்வி அமைச்சு

ஒருங்கிணைப்பு

எஸ்.லலிதாம்பிகை -உதவிக் கல்விப் பணிப்பாளர்- ஆரம்பக் கல்வி – கல்வி அமைச்சு
ஏ.டி.பாலபட்டபெந்திகே -உதவிக் கல்விப் பணிப்பாளர்- ஆரம்பக் கல்வி-கல்வி அமைச்சு
எச்.ஜி.நெத்மி அப்சரா – அபிவிருத்தி அதிகாரி -ஆரம்பக் கல்வி – கல்வி அமைச்சு

எழுத்தாளர் குழு

1. திருமதி எம்.கே.கலிமதுநிஸா – ஆசிரிய ஆலோசகர்- நிக்கவரெட்டிய கல்வி வலயம்
2. திரு எஸ்.சிவபாலன் - ஆசிரிய ஆலோசகர்- கிளிநொச்சி கல்வி வலயம்
3. திருமதி என்.அகிலதாஸ் - ஆசிரிய ஆலோசகர்- யாழ்ப்பாணக் கல்வி வலயம்
4. திரு.த.சுந்தரலிங்கம் - ஆசிரிய ஆலோசகர்- வவூனியா வடக்கு கல்வி வலயம்
5. திருமதி மாலதி முகுந்தநாதன்- ஆசிரிய ஆலோசகர்- கொழும்பு கல்வி வலயம்
6. திருமதி எம்.எம்.கே.மௌபியா- ஆசிரிய ஆலோசகர்- கம்பஹா கல்வி வலயம்
7. திருமதி இ.அருளம்பலம் - ஆசிரிய ஆலோசகர்-மட்டக்களப்பு கல்வி வலயம்
8. திரு ஏ.இராஜேந்திரன் - ஆசிரிய ஆலோசகர்- நுவரெலியா கல்வி வலயம்
9. திருமதி ஜே.பிரபாவதி - ஆசிரிய ஆலோசகர்- ஹற்றன் கல்வி வலயம்

தெரிவூ செய்யப்பட்ட ஆய்வூத் தலைப்புக்கள்

1. “எழுதத் தெரியாதவன்இ வாசிக்க இயலாதவன் என்ற பெயர் இனி இல்லை”.- திருமதி எம்.கே.கலிமதுநிஸா

2. “லகரஇ ளகரஇ ழகரங்களை அனுசரித்து எழுதுவோம்;” - திரு எஸ்.சிவபாலன்

3. “கிரகித்து எழுதும் திறனை மேம்படுத்துவோம்;” திருமதி என்.அகிலதாஸ்

4. “கொண்டு வருதலுடன் கழித்தலில் அடைவூ மட்டத்தை உயர்த்துவோம்” திரு.த.சுந்தரலிங்கம்

5. “வகுத்தல் என்னும் கணித செய்கையில் மாணவர்களின் இடர்ப்பாடுகளை நீக்குவோம” ; திருமதி மாலதி முகுந்தநாதன்

6. “தமிழ் மொழியில் உயிர்க் குறிகளை அனுசரித்து எழுதுவோம்” - திருமதி எம்.எம்.கே.மௌபியா

7. “கற்றல் உபகரணங்களைப் பயன்படுத்திக் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவோம்”; - திருமதி இ.அருளம்பலம்

8. “ஒலி வேறுபாடுகளை அனுசரித்து வாசித்தலும் எழுதுதலை மேம்படுத்தும்”- திரு ஏ.இராஜேந்திரன்

9. ‘கணித செயற்பாடுகளின் ஊடாக மீத்திறன் மாணவர்களின் அடைவை உறுதிப்படுத்துவோம்”- திருமதி ஜே.பிரபாவதி

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.