moe.gov.lk

அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் தலைமையில் கல்வி அமைச்சின் புதிய ஆண்டு கடமைகள் ஆரம்பிக்கப்பட்டன.

jan1புதிய ஆண்டில் முதலாவது வேலை நாளான இன்று கல்வி அமைச்சுக்கு விசேட நாளாகும். பிறந்துள்ள 2017 புதிய ஆண்டில் ஆசீர்வாதத்தை வேண்டி நடாத்தப்பட்ட விசேட அனைத்து மத வழிபாடுகளுடன் கல்வி அமைச்சில் உத்தியோகபூர்வ கடமைகள் இன்று (02) முற்பகல் ஆரம்பமாகின. இது கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் தலைமையில் இடம் பெற்றது. கல்வி அமைச்சின் நலன்புரிச் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

jan2 jan3

இன்று காலை 6.30 க்கு அமைச்சுக்கு வருகை தந்த அமைச்சர், கல்வி அமைச்சின் வளவில் உள்ள சகல கிளைகளுக்கும் சென்று கண்காணிப்பு வேலைகளில் ஈடுபட்டது சிறப்பான அம்சமாகும்.

அதனைத் தொடர்ந்து, அமைச்சரின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட தேநீர் விருந்திலும் கலந்து கொண்ட அமைச்சர் அங்கு அலுவலர்களுடன் நட்புறவாகக் கலந்துரையாடினார்.

 

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.