moe.gov.lk

2017 ம் ஆண்டு இந்த நாட்டில் கல்வித் துறையில் பாரிய திருப்பம் ஏற்படுத்தும் ஆண்டு

text32017 ம் ஆண்டு இந்த நாட்டில் கல்வித் துறையில் பாரிய திருப்பம் ஏற்படுத்தும் ஆண்டு என்றும் அதற்கு அமைய இந்த நாட்டின் பாடசாலைக் கல்விக்கு உரியவாறு மறுசீரமைப்பு பலவற்றை இந்த ஆண்டில் செயல்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் கூறினார். இன்று (05) 2017 ம் ஆண்டுக்கான இலவச பாடநூல் பகிர்ந்தளிப்பு தேசிய பெருவிழா கோட்டை ஆனந்த கலையகத்தில் (வித்தியாலயம்) இடம் பெற்றபோது அதில் பிரதம அதிதியாக தலைமையேற்று உரையாற்றிய போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

text4 text2

அதற்கமைய சுயாதீன கண்காணிப்பு சபையொன்றை நிறுவுவதற்கும, 13 ஆண்டுகள் தொடர்ச்சியான கட்டாயக் கல்விக்கும் ஒவ்வொரு பாடசாலைப் பிள்ளைக்கும் உடனலக் காப்புறுதி பெற்றுக் கொடுப்பதற்கும் க. பொ. த. உயர்தரத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணினி வழங்குவதற்கும் அந்த டெப் கணினியில் தேவையான பாடப் பரிந்துரைகள் மற்றும் கற்றல் வசதிகளை உட்படுத்துவதற்கும் நடவடிக்கை தயாராக இருப்பதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் மேலும் பேசுகையில் எதிர்காலத்தில் க. பொ. த. உயர்தரம் மற்றும் க. பொ. த. சாதாரண தரம் ஆகியவற்றின் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு ஆண்டில் ஒரு நிரந்தரமான திகதியை குறித்தொதுக்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

அவ்வாறே பாடசாலைகளில் 2017 ம் ஆண்டில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளல் சாதாரணமாக இடம்பெறுவதற்கு தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுற்றறிக்கைக்கு அமைவாக செயல்படாத அலுவலர்களுக்கு எதிராக தராதரம் பார்க்காது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் அல்லது தத்தமக்கு வேண்டியவர்களுக்கு சிறிதும் விசேட சலுகை காட்டப்பட மாட்டாது என்றும் அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.

நாடு முழுதும் பாடசாலைகளில் கல்வி பெறும் நாற்பத்தி மூன்று இலட்சத்துக்கு அதிகமான பாடசாலை மாணவருக்கு இம்முறை 42 மில்லியன் பாடநூல்களை அச்சிடப்பட்டுள்ளது. 410 வகையான பா நூல்கள் அதன் கீழ் அச்சிடப்பட்டுள்ளன. அத்துடன் பாடசாலை பாடநூல்களை அச்சிடல், பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் ரூபா 5,415 மில்லினைச் செலவிட்டுள்ளது. 2017 ம் ஆண்டில் இம்முறை 2 ம் மற்றும் 8 ம் தரங்களில் புதிய பாடப் பரிந்துரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் அதற்கு அமைய 53 வகையான புதிய நூல்கள் இதுவரை பாடசாலைகளுக்கு வழங்கி முடிக்கப்பட்டுள்ளது.

text7 text6

எதிர்காலத்தில் தெரிவு செய்யப்பட்ட பல பாடங்கள் தொடர்பில் இலத்திரனியல் பாடநூல்களைத் தயாரிக்க கல்வி வெளியீட்டுத் திணைக்களம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அதன’ முதற் கட்டமாக க. பொ. த. உயர்தர தொழினுட்ப பாடப் பிரிவின் கீழே மோட்டார் தொழிற் கல்வி மற்றும் உயிரியல் கல்வி பாடங்களுக்கு உரிய சிங்கள மற்றும் தமிழ் மொழிகளிலும், 11 ம் தரத்தில் விஞ்ஞான பாடத்துக்கு சிங்களம், தமிழ் மற்றும் ஆகிய மூன்று மொழிகளிலும் ஈ-பாடநூல்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்வாறே கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மூலம் வெளியிடப்படும் அனைத்து பாடநூல்களினதும் மென்தட்டுகளை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தில் தற்போது பதிவிறக்கம் செய்துகொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் வெளிநட்டலுவல்கள் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கல்வி அமைச்சின் செயலாளர் திரு சுனில் ஹெட்டியாராச்சி, கல்வி இராஜாங்க செயலாளர் திரு திஸ்ஸ ஹேவாவிதாரண, கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் திரு ஐ. எம். கே. பீ. இலங்கசிங்க, தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஜயந்தி குணசேகர உட்பட பல அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.