moe.gov.lk

உலகில் இடம் பெறும் விரைவான மாற்றங்களை அடையாளம் கண்டு அவற்றுக்கு ஏற்றவாறு சகல துறைகளிலும் மாற்றங்கள் இடம் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

towerஉலகில் இடம் பெறும் விரைவான மாற்றங்களை அடையாளம் கண்டு அவற்றுக்கு ஏற்றவாறு சகல துறைகளிலும் மாற்றங்கள் இடம் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். கடந்த 08 ம் திகதி முற்பகல் கொழும்பு 07 ல் அமைந்துள்ள அரச திரைப்படக் கூட்டுத்தாபன வளவில் கட்டுமானம் செய்யப்படும் பொது நாட்டிய நிர்வாக சபைக்காக கட்டப்படும் புதிய கட்டிடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் விரிப்பங்களை நிறைவேற்றி நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நினைவு நாளான இன்றைய நாள்வரை தீவு முழுவதும் பல்வேறு அபிவிருத்தி செயற்றிட்டங்கள் ஆரம்பிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறிய அமைச்சர், அதி சிறந்த கலைப் படைப்புகளை உருவாக்குவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது என்றும் கூறினார். புதிய அரசாங்கத்தின் கீழே கலைஞர்கள் உள்ளிட்ட சகலரும் களிப்படையச் செய்யும் சுதந்திரத்தை இல்லாமல் ஆக்குவதற்கோ அதற்கு பாதிப்பு ஏற்படும் வண்ணம் செயல்படுவதற்கோ அரசாங்கம் சிறிதளவும் விருப்பம் உடையதாக இருக்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

tower1 tower2

டிஜிட்டல் தொழினுட்பம் மற்றும் எதிர்காலம் பற்றி கவனம் செலுத்தி, திரைப் படங்கள் சம்பந்தப்பட்டது போன்று நாட்டியம் மற்றும் நடிப்பு சம்பந்தமாகவும் கவனத்தில் எடுத்து புதிய சட்ட விதிகளுடன் நாட்டிய நிர்வாக சபைக்கான சட்டத்தைக் கொண்டு வருவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பொது நாட்டிய நிர்வாக சபைக்காக கடப்படும் கட்டிடத் தொகுதிக்காக அரசாங்கம் ரூபா 50 மில்லியன் ஒதுக்கியுள்ளது. இந்த கட்டித் தொகுதியின் உள்ளே திரைப்படக் காட்சிக்காக நூற்றுக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் அமரக் கூடிய அதி நவீன டிஜிட்டல் வசதிகள் கொண்ட சினிமா மண்டபம் ஒன்றைக் கட்டுவதுடன், டிஜிட்டல் சான்றிதழ்கள் வழங்குவதையும் இந்த கட்டிடத் தொகுதியில் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். அவ்வாறே வெளிவாரி தனிநபர்களின் தேவையின் பொருட்டு திரைப்படங்களை திரையிடுவதற்கு பிரதான மண்டபத்தை ஒதுக்கிக் கொள்ள முடிவதுடன் பரிசு விழாக்களில் நடுவர் குழாம் தொடர்பிலும் இந்த மண்டபத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும்.
இந்த விழாவில் ஊடக மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ கயந்த கருணாதிலக்க, நாட்டிய நிர்வாக சபையின் தலைவர் திரு சமன் அதாவுடஹெட்டி, அரசாங்க திரைப்படக் கூட்டுத்தாபன தலைவர் திரு தீபால் சந்திரரத்ன உட்பட அலுவலர்கள் மற்றும் பிரபல கலைஞர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

 

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.