19 ஆண்டுகளுக்குப் பின்னர் ஓர் ஆண்டு சேவை ஆரம்ப பயிற்சியுடன் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 111 ம் வகுப்பில் 198 புதிய அலுவலர்கள்.
தற்போதைய பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அப்போது கல்வி அமைச்சராக இருந்த காலத்துக்குப் பின்னர் ஓர் ஆண்டு சேவை ஆரம்ப பயிற்சியுடன் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 111 ம் வகுப்பில் 198 புதிய அலுவலர்களைச் சேர்த்துக்கொள்ள முடிந்ததாக கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் கூறினார்.
பண்டாரநாயக்கா நினைவு பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) காலை இடம்பெற்ற இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 111 ம் வகுப்பில் நியமனம் பெற்றவர்களான 198 புதிய அலுவலர்களின் சேவை நுழையும் ஆரம்ப விழாவின் பிரதம அதிதியாக் கலந்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
கடநத அரசாங்க காலத்தில் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் அரசியல் மற்றும் தனிப்பட்ட விருப்பின் மீது இடம் பெற்ற நியமனத்துக்குப் பதிலாக திறந்த மற்றும் ஆய்வு முறைகளின் மூலம் கல்வித் துறைக்கு தகைமை உடைய திறமைசாலிகள் சேர்வதற்கு வாய்ப்பு வழங்குவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் அதற்கு அமைய இலங்கை கல்வி நிர்வாக சேவையின் 111 ம் வகுப்புக்கு அலுவலர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு 2016 ம் ஆண்டு போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டது என்று கூறினார். அதற்கு அமைய நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் 198 பேர் இலங்கை கல்வி நிவாக சேவையின் 11 ம் வகுப்புக்கு நியமனம் பெறுவதற்கு தகைமை பெற்றிருந்தார்கள்.
![]() |
![]() |
தொடர்ந்தும் உரையாற்றிய கல்வி அமைச்சர், கல்வி நிர்வாக சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த ஆண்டு தொடக்கம் ஆண்டு தோறும் அதற்கான போட்டிப் பரீட்சைகளை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.
இந்த புதிய நியமனம் பெற்றவர்கள் 2017 .01. 17 ம் திகதி முதல் 12 மாத சேவையாரம்பப் பயிற்சி வேலைத் திட்டத்துக்கு மகரகமை, தொழில் முனைவோர் முகாமைத்துவ கல்விக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் பயிற்சி வேலைத் திட்டம் நிறைவுற்ற பின்னர் தீவு முழுவதிலும் அமைந்துள்ள மாகாண கல்வி அலுவலகங்கள், வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஏற்ப உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பாடப் பணிப்பாளர்கள், அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள் என்றவாறு இந்த அலுவலர்கள் பதவியில் அமர்த்தப்படுவார்கள்.
இந்த விழாவின் போது கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வே. இராதாகிருஷ்ணன், கல்வி அமைச்சின் செயலாளர் திரு சுனில் ஹெட்டியாராச்சி, கல்வி இராஜாங்க செயலாளர் திரு திஸ்ஸ ஹேவாவிதாரண ஆகியோர் உட்பட கல்வி அமைச்சின் அலுவலர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.