moe.gov.lk

கொழும்பு றோயல் கல்லூரியில் முதலாம் தரத்தில் மாணவர்களைச் சேர்க்கும் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தற்காலிக வேலை நீக்கம்.

suகொழும்பு றோயல் கல்லூரியில் முதலாம் தரத்தில் 2017 ம் ஆண்டில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் போது இடம் பெற்ற முறைகேடுகள் தொடர்பாக கல்வி அமைச்சர் மெகளரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் பணிப்புரையின் பேரில் அமைக்கப்பட்ட விசேட விசாரணைக் குழு மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் பிரதான நேர்முகத் தேர்வுக் குழுவின் அலுவலர்கள் மூவர் மற்றும் மேன் முறையீட்டு சபையில் இருந்த அலுவலர்கள் நால்வரை வேலை நீக்கம் செய்யப்படுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம் செய்துள்ளது.

வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களில் நேர்முகத் தேர்வுக் குழுவில் பணியாற்றிய கொழும்பு றோயல் கல்லூரியில் பிரதி அதிபர், உதவி அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவருடன், மேன் முறையீட்டு சபையில் பணியாற்றிய களனி தர்மாலோக்க வித்தியாலய அதிபர், மிலாகிரிய புனித பவுல் மகளிர் வித்தியாலய பிரதி அதிபர், கொழும்பு றோயல் கல்லூரி பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவரும் உள்ளடங்குவர். இது தொடர்பில் மேற்கொண்டும் விசாரணைகள் இடம் பெறும்.

மேலும், கொழும்பு றோயல் கல்லூரியில் தமது பிள்ளையைச் சேர்த்துக்கொள்வதற்கு வஞ்சனையான ஆவணங்களைச் சமர்ப்பித்த அந்த பாடசாலையில் நிரந்தர தொழிலாளியாகப் பணியாற்றிய ஒருவரையும் வேலை நீக்கம் செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானம் செய்துள்ளது.

பிரபல பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்க்கும் போது முறைகேடுகள் பல இடம் பெற்றிருந்ததாக பல்வேறு தரப்பினரால் செய்யப்பட்ட முறைப்பாடுகளைப் பரிசீலனை செய்த வேண்டும் என்ற கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் பணிப்புரையின் பேரில் இந்த விசாரணை இடம் பெற்றது.

கொழும்பு றோயல் கல்லூரியை விட இன்னும் 15 பிரபல பாடசாலைகள் சம்பந்தமாகவும் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தவறு செய்தவர்களுக்கு தராதரம் பராது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அலுவலர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.