moe.gov.lk

திடீரென்று ஏற்படும் இயற்கை இடர் காரணமாக நிகழும் உயிர் மற்றும் பொருட் சேதங்களை கூடிய மட்டும் குறைத்துக் கொள்ளல் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். – கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் கா

3K1A3705திடீரென்று ஏற்படும் இடர் காரணமாக நிகழும் உயர் மற்றும் பொருள் இழப்புகள் அதிகரிப்பதற்குக் காரணம் நாடு பூராவும் அமைந்துள்ள இடர் நிறைந்த வலயமாங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகள் மற்றும் ஆபத்து நிறைந்த பகுதிகளில் வீடு கட்டுதல் மற்றும் மக்கள் குடிருத்தல் என்பவற்றைத் தவிர்ப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமையே என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் கூறினார். கடந்த வாரம் (1ம் திகதி) காலை ஐக்கிய தேசியக் கட்சி தலைமை அலுவலகம் சிறிகோத்தாவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்த கொண்ட போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். கடந்த அரசாங்க காலத்தில் இவ்வாறு குடியிருப்பதை தவிர்ப்பதற்கு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆயினும், தற்போதைய அரசாங்கம் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பான வதிவிடத்தை பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான வேலைத் திட்டங்களை மேற்கொள்கின்றது என்றும் குறிப்பிட்ட அமைச்சர், இது தொடர்பில் மக்கள் தெளிவு பெற்றவர்களாக செயற்படுவது மிக முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.


மனித செயற்பாடுகளின் தாக்கத்தால் சமீப காலத்தில் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது என்றும் விளக்கிய அமைச்சர் இவ்வாறு நிகழ்ந்த அவ்வாறான இரண்டு கொடிய இயற்கை அனர்த்தங்களுக்கும் சாலாவை பகுதியில் ஏற்பட்ட களஞ்சியத் தீப்பிடிப்பு, மீதோட்டமுல்லை அனர்த்தம் போன்ற விரும்பத் தகாக நிகழ்வுகளுக்கு தற்போதைய அரசாங்கம் வெற்றிகரமாக முகம் கொடுத்து மக்குக்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்ளும் செயற்பாடுகள் சம்பந்தமாக அமைச்சர் கௌரவ அகிய விராஜ் காரியவசம் இங்கு கருத்து தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக தீவில் 8 மாவட்டங்களைத் தாக்கிய வெள்ள அனர்த்தத்தில் அகப்பட்ட இருபத்தைந்தாயிரம் வரையிலான மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருப்பதாக கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார். அந்த பக்கேஜ் பொதியில் 3 சீருடைப் பொதிகள், பாடநூல் பொதி, ஒரு சோடி காலணி மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டு இருப்பதாகக் கூறிய அமைச்சர் அவற்றுக்கு மேலதிகமாக வெள்ளத்தால் வீணாகிப் போன பரீட்சைச் சான்றிதழ்களை வழங்குவதற்கு இலங்கை பரீட்சைத் திணைக்கள ஆணையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

இடருக்கு உள்ளாகியுள்ள அரச அலுவலர்களை இலக்காகக் கொண்டு அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் நிவாரண வேலைத் திட்டங்களுக்கு மேலதிகமாக இடருக்கு உள்ளாகிய ஆசிரியர்களுக்கு விசேட அக்கறை காட்டியுள்ளயதாக சுட்டிக் காட்டிய கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படும் இடருதவிக் கடன் பெற விண்ணப்பிக்கும் போது வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்மாருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இடருக்கு ஆளாகியவர்களுக்கு நிவாரணம் வழங்கலின் பொருட்டு நிவாரணக் கடன் திட்டம் முறையையும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அதற்கு ரூபா 2 பில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வெள்ளம் மற்றும் சூறாவளியால் சில பாடசாலைகளின் கட்டிடங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் எந்தவொரு கணக்கெடுப்பும் இல்லாது பாடசாலை நடாத்துவதற்கு இயலாது என்று குறிப்பிட்ட அமைச்சர் அதற்கு அமைய பாடசாலை மாணவருக்கு ஏற்படக் கூடிய பாதிப்பை தவிர்த்துக் கொள்ளும் நோக்கத்தில் வெள்ளத்தால் இடருக்கு உள்ளான 08 மாவட்டங்களில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் ஜூலை 02 ம் திகதி வெள்ளிக் கிழமை வரைக்கும் விடுமுறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். கல்வி அமைச்சின் பொறியியலாளர்கள் உட்பட தொழினுட்ட அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் கட்டிடங்களின் நிலைமையைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக தற்போது அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்களின் அறிக்கைகள் பெற்ற பின்னளர் மூடப்பட்ட பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இத்தகைய அனர்த்த நிலை காரணமாக உடைந்து வீழ்ந்த மற்றும் பழுதடைந்த சகல பாடசாலைகளும் வெகு விரைவில் சீரமைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், நாடு முழுவதும் பாடசாலைகளில் உள்ள பழைய பாதுகாப்பற்ற கட்டிடங்கள் சம்பந்தமான தகவல்களைத் திரட்டி அவற்றை மீண்டும் சீரமைத்துக் கொடுப்பதற்கும் கட்டியெழுப்புவதற்கும் தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் இதன் போது கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

அவ்வாறே, மீண்டும் பாடசாலை ஆரம்பமாகிய பின்னர் இடர் நிலைமைக்கு உள்ளாகிய பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது சீருடை அணிந்து வருவது கட்டாயமில்லை என்றும், பாடசாலை சீருடைக்குப் பதிலாக தம்மிடம் இருக்கும் வேறு உடையையோட பாடசாலைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படுகினறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இநத் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாறசிங்க அவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் ஆளுங்கட்சு உறுப்பனர்கள் தமது சம்பளத்தை இடருக்கு உள்ளாகிய பாடசாலை மாணவர்களின் நிவாரண நடவடிக்கைகளுக்காக வழங்குவாதற்கு முனமொழிவு செய்திருப்பதாகவும், சகலரினதும் ஒன்றிணைவு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.