moe.gov.lk

பாதிப்படைந்து காணப்படும் பாடசாலைகளை மீண்டும் திருத்தி அமைக்கும் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் தெற்கு மாகாணத்தில் சுற்றுலா.

floodஇடர் மற்றும் பொருட் சேதங்களை குறைப்பதற்காக வகைகூறக் கூடிய அலுவலர்கள் சரியான முறையில் செயல்படாமை தொடர்பில் அமைச்சர் அதிருப்தி.

இடர் நிலைமை காரணமாக பாதிப்புக்கு உள்ளான மக்களின் சுக நலன்களை விசாரித்தறிதல் மற்றும் அழிவுற்ற பாடசாலைகளின் நிலைமையை ஆராய்ந்தறிதல் சம்பந்தமாக கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் கடந்த 04 ம் திகதி தெற்கு மாகாணத்தில் பல பகுதிகளுக்கு சுற்றுலா சென்றார் அக்குரஸ்ஸ, மொறவாக்கை, தெனியாய, கொட்டபொல, பிட்டபெத்தர, பாகியன்கல் உட்பட பல பகுதிகளுக்குப் பயண செய்த அமைச்சர், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான விரைவான நடவடிக்கை தொடர்பில் இங்கு அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்புக்கு உள்ளான மாத்தறை குடகலஹேன வித்தியாலயம், பிட்டபெத்தர டட்லி சேனாநாயக்கா வித்தியாலயம், தெனியாய மத்திய மகா வித்தியாலயம், மொறவாக்கை மத்திய மகா வித்தியாலயம் உட்ப பல பாடசாலைகளில் அமைச்சர் இதன்போது விசேட கண்காணிப்பை மேற்கொண்டார்.


இடரைத் தவிர்த்துக்கொள்ளல் மற்றும் பொருட் சேதங்களைக் குறைத்தல் தொடர்பில் சகலரும் வகை கூறல் மற்றும் பொறுப்புடன் கடமைகளைச் செய்தல் இன்றியமையாதது என்றும், பரிசோதனை இல்லாமல் கட்டிடம் கட்டுதல், அந்த சந்தர்ப்பங்களில் சரியான முறையில் செயல்படாமை போன்ற காரணங்களின் இவ்வாறான விபத்துகளை பாலனம் செய்யும் சந்தர்ப்பங்களை அலட்சியம் செய்ததன் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள சில பாடசாலைகள் சம்பந்தமாக ஆராய்ந்து பார்க்கும் போது தெளிவாக விளங்குகின்றது என்றும் இது தொடர்பில் சரியான தலையீடு செய்த அதிகாரிகள் மீது தாம் அதிப்தி தெரிவிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விசேடமாக மண்சரிவு அபாயம் இருக்கும் காரணத்தால் அதைச் சமாளிக்கும் விதமாக கணினி ஆய்வு கூடம், நூலகம், அழகியல் அலகு போன்றவற்றை அடித்தளத்தில் அமைப்பதை தவிர்த்து அவற்றை மேல் தளத்தில் அமைக்க வேண்டும் என்றும், அழிவடைந்து போன மற்றும் சேதமடைந்த கட்டிடங்களுக்குப் பதிலாக புதிய மாடிக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

அத்துடன் அழிவடைந்து போன பாடசாலைகளுக்கு கணினி, அழகியல் உபகரணங்கள் உட்பட ஏனைய பொருட்களை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். ஒவ்வொரு பாடசாலையினதும் பௌதிக இயல்பு, புயியியல் சூழல், பாடசாலைக் கட்டிடம் கட்டப்பட்டுள்ள தன்மை முதலானவற்றை பரிசீலகைகு எடுத்து பாடசாலைக்கு மரபு அடிப்படையிலான பிரதான திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு பாடசாலைக்கும் அறிவுத்தல் வழங்கப்பட்டு இருப்பதாகவும் சில பாடசாலை தலைவர்கள் அந்த அறிவுறுத்தல்களை கவனத்தில் எடுக்காது விட்டதன் காரணமாக இத்தகைய அனர்த்த சமயங்களில் ஏற்படும் பாதிப்பை குறைத்துக் கொள்ள முடியாது இருக்கின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார், அவ்வாறே இந்த கண்காணிப்பின் போது, “அருகில் உள்ள பாடசாலை அருமையான பாடசாலை” செயற்றிட்டத்தின் கீழே தெரிவு செய்யப்பட்ட சில பாடசாலைகளில் முக்கியத் தேவைப்பாடுகளுக்கு அப்பாலான வேறு தேவைப்பாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிலர் செயல்படுவது தொடர்பில் அமைச்சர் விமர்சித்தார். ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமத்துக்கு அமைய செயல்படும் “அருகில் உள்ள பாடசாலை அருமையான பாடசாலை” செயற்றிட்டத்தின் கீழே பாடசாலையில் நிலவும் முக்கிய தேவைப்பாடுகளை அடையாளம் கண்டு செயல்படுவது அத்தியவசியம் என்றும் கூறினார்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.