moe.gov.lk

கல்வி அமைச்சர் பாகியன்கல் சுற்றுலா, மண்சரிவு எச்சரிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார்.

1மண்சரிவு எச்சரிக்கை விடப்பட்டுள்ள புராதன பாகியன்கல் குகைகள் சம்பந்தமாக பன்முக விரிவான அறிக்கையை சமர்பிக்குமாறு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். கடந்த 04 ம் திகதி பாகியன்கல் குகைகளின் தற்போதைய நிலையைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக அந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட துறை நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தகவல்களை ஆராய்ந்து பார்த்த போது அமைச்சர் இந்த அறிவுறுத்தலை அதிகாரிகளுக்கு வழங்கினார். அதற்கு அமைய தொல்பொருளியல், பொறியியல், வாஸ்துவியல், புவி அமைப்பியல் உட்பட பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை இணைத்துக் கொண்டு உரிய அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2 3

தொல்பொருளியல், பொறியியல், வாஸ்துவியல், புவி அமைப்பியல் உட்பட பல துறைகளின் நிபுணர்களை இது தொடர்பில் இணைத்துக் கொண்டு இது தொடர்பான அறிக்கை பெற்றுக்கொள்ளப்படும்.

அத்துடன் மண்சரிவு அபாயம் காரணமாக அருகில் உள்ள விகாரைகளில் வாழும் 30 க்கும் அதிகமான பிக்குகள் உயிர்பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இடர் நேரலாம் என்றிருப்பதால் பிக்குமார்களின் பாதுகாப்பை முன்னிட்டு குறித்த பிரிவினால் தொடர்பில் தற்காலிக குருமனை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய பண்பாட்டு நிதியத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பிரசாந்த குணவர்தனாவுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கினார்.

வரலாற்றுக்கு முற்பட்ட 58000 ஆண்டு கால பெருமை கொண்ட, இலங்கையின் விசாலமான இயற்கை கற்குகைகாக அறியப்படும் புராதன பாகியன் குகயைங எதிர்கால சந்ததிக்காக பாதுகாத்துக் கொடுப்பது தேசிய பொறுப்பாக இருப்பதனால், விசேமாக உண்ணாட்டில் போன்று பன்னாடுகளிலும் பாரிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட, சுற்றுலா, புராதனம் போன்ற தொல்பொருளியல் பெறுமதி கொண்ட இந்த இடத்தை பாதுகாப்பது தொடர்பில் முழுக் கவனம் செலுத்தி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.