moe.gov.lk

அனர்த்த நிலைமை காரணமாக பாதிப்புக்கு உள்ளான பாடசாலை மாணவர்களுக்கான சீருடை, பாடநூல்கள் உள்ளடங்கிய பொதிகளை பங்கிட்டளிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் தயார்.

repackஅனர்த்த நிலை மை காரணமாக பாதிப்புக்கு உள்ளான பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் நிலைப்படுத்துவதற்க விசேட நிவாரண பொதிகளை வழங்குவதறகனு தேவையான நடவடிக்கை முறைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கடந்த வாரம் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அதற்கு அமைய, ஒரு மாணவனுக்கு ரூபா 10,000/= பெறுமதியான பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி என்ற அடிப்படையில் பாதிப்புக்கு உள்ளான சகல மாணவருக்கும் வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய பாடசாலைகள் மற்றும் பிரதான செயற்றிட்ட நிறுவனமான கல்வி அமைச்சு இந்த வேலைத் திட்டத்தில் ஒன்றிணைந்தன. அதற்கு அமைய கடந்த புதன் கிழமை முதல் கல்வி அமைச்சுக்கு நாடு பூராவிலும் உள்ள தேசிய பாடசாலைகள் பல பாடசாலை மட்டத்தில் ஒன்றிணைந்து பொருள் உதவிகளை கொண்டு வந்து கொடுத்தன. இந்த நிவாரண உதவி முறைப்படி வகைப்படுத்தப்பட்டு, உரிய முறையில் பகிர்ந்தளிக்கும் பொருட்டு மேற்கொண்ட ஏற்பாடுகளின் இறுதிக் கட்டம் முடிவுற்று தற்போது செயற்படுத்தப்படுகின்றது.

கல்வி அமைச்சின் பணிக்குழுவும் பாடசாலை மாணவர்களின் ஒத்துழைப்புடன் இந்த பொதி செய்யும் பணிகளை தற்போது விரைவாக மேற்கொண்டு வருகின்றது. கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண பொதியில் சீருடைப் பொதிகள் 03, காலணி வவுச்சர், பாடநூல்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. இததுடன் ஒரே நேரத்தில் தேசிய பாடசாலைகளாலும் வர்த்தக நிறுவனங்களாலும் பாடசாலை மாணவருக்கு தேவையான பாடசாலை பை, உணவுப் பெட்டி, தண்ணீர்ப் போத்தல், உடுப்புகள், பயிற்சிப் புத்தகங்கள், சுகாதாரத்துக்கான பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் பலவற்றை வழங்கியுள்ளன. அந்த பொருட்கள், இந்த நிவாரண பொருட்களை குறித்த நிவாரணப் பொதிகளில் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர் வரும் சில வாரங்களில் அனர்த்த நிலைமை காரணமாக பாதிப்புக்கு உள்ளான மாணவர்களுக்கு இந்த பொருள்களை பகிர்ந்தளிப்பதற்கு தயார்செய்யப்பட்டுள்ளது.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.