moe.gov.lk

பௌத்த சாசனங்கள், இந்த நாட்டின் பௌத்த மரபுரிமைகளை எப்போதும் முழுதும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன் என்று அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்கள் றுவன்வெளி சைத்தியத்தின் முன்னால் உறுதி மொழி எடுத்தார்....

ru1பௌத்த சாசனங்கள், இந்த நாட்டின் பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்கும் போது எந்த தடைகள் வந்தாலும் அவற்றுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் றுவன்வெளி தாதுகோபுரத்தின் முற்றத்தில் கடந்த வாரம் சபதம் எடுத்தார். றுவான்வெளி தாதுகோபுரத்தின் (சைத்தியம்) அதிபர் அதி வண. பல்லேகமை ஹேமரத்ன தேரரின் அநுசாசனத்தின் பேரில் பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனையின் படி மத்திய பண்பாட்டு நிதியத்தின் மூலம் 23 மில்லியன் ரூபா செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட றுவன்வெளி சைத்தியத்தின் மணல் முற்ற மறுசீரப்பு வேலைகள் முடிந்து நடாத்தப்பட்ட பூஜையில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்ட சபதம் எடுத்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் இந்த நாட்டில் பௌத்த தொல்பொருளியல் தலங்கள் அமைந்துள்ள பிரதேசங்களின் எல்லைகளை உறுதிப்படுத்தல் தொடர்பில் விசேட வேலைத் திட்டம் நடைபெறுவதாகவும் கவனத்தில் கொண்டு வந்தார்.

ru2 ru3

அதற்கு அமைய கூரகல் ஆதி தொல்பொருளியல் தலங்களை உடனடியாக மறஙுசீரமைத்தல் தொடர்பில் தலையிடல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சவர் எந்த இடையூறு ஏற்பட்டாலும் தொல்பொருளியல் மரபுரிமையைப் பாதுகாப்பது சம்பந்தமாக தான் அர்ப்பணிப்புடன் செயல்படுதாக குறிப்பிட்டார். அத்துடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுழிவுச் சீட்டுகளை விறபனை செய்வதனட மூலம் மத்திய பண்பாட்டு நிதியம் பெறும் வருமானத்தினால் தீவு முழுதும் உள்ள பல விகாரைகளை மறுசீரமைப்பதற்கு இந்த ஆண்டில் மாத்திரம் 400 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது என்றும், மேலும் 100 மில்லியன் ரூபா கஷ்டப் பிரதேசங்களில் உள்ள விகாரைகளை மறுசீரமைப்பதற்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பிங்கமை நிகழ்ச்சிக்கு அமைச்சர் கௌரவ பீ. ஹரிசன், அமைச்சர் கௌரவ (திருமதி) சந்திராணி பண்டார உட்பட மத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் வந்திருந்தனர்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.