moe.gov.lk

தொல்பொருள் தலங்களை மேம்படுத்துவதற்காக தொல்பொருளியல் அதிகரிகளுக்கு வெளிநாட்டுப் பயிற்சி பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் - கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்.

3K1A3156தொல்பொருள் துறையில் ஆய்வுக் கற்கை மற்றும் பன்னாட்டு மட்டத்தில் வினைத் திறனைக் கைக்கொள்ளவும் நமது நாட்டில் தொல்பொருளியல் அலுவலர்களுக்கு பயிற்சி வாய்ப்பு வழங்குவது காலத்தின் தேவைப்பாடாகும் என்றும் அதன் பொருட்டு தொல்பொருளியல் திணைக்களத்தின் ஒதுக்கீட்டு நிதி போதாது என்றால் அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்குத் தான் தயார் என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் கூறினார்.

தேசிய தொல்பொருளியல் தினத்தை முன்னிட்டு இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று (07) நடைபெற்ற தொல்பொருளியல் மாகாநாட்டில் கலந்துகொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், நவீன பன்னாட்டு பாதுகாப்பு முறைமை மற்றம் அறிவு என்பன எமது தொல்பொருளியல் துறையை மேலுயர்த்துவதற்கு அவசியமானதாகும் என்று வலியுறுத்தினார்.

தொல்பொருளியல் நடவடிக்கைகளுக்கு நவீன தொழினுட்பத்தை பயன்படுத்துவது போல நிபுணத்துவ உதவிகளை பெற்றுக் கொள்ளும் போது வெளிநடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள நேரிடும் என்றும், துறையில் தற்போது இருக்கும் ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்துவதற்கும் அவர்களின் நிபுணத்துவ அறிவை இந்த துறையை மேம்படுத்துவதற்கு பெற்றுக் கொள்வதற்கு திட்டம் தயாரிப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


இந்த நிகழ்ச்சியல் தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பீ. பீ. மண்டாவலை, மத்திய பணபாட்டு நிதியத்தினட பணிப்பாளர் நாயகம் திரு பிரசாந்த குணவர்தனா, முன்னாள் தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சிரான் தெரணியகலை உட்பட நிபுணர்கள் பலர் கலந்து கொண்டனர்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.