moe.gov.lk

“எந்தவித அரசியல் சக்திக்கும் அடிபணியாமல் தொல்பொருள் தலங்களை மேலுயர்த்துவதற்காக பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுகின்றேன்” – கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்.

priiநமது நாட்டின் பெறுமதி மிக்க தொல்பொருளியல் தலங்கள் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் வரை இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் அந்த பெறுமதிமிக்க தொல்பொருள் நிலையங்கள் மற்றும் தொல்பொருளியல் சார்ந்தவைகளையும் பாதுகாப்பதற்காக எந்தவொரு அரசியல் சக்திக்கும் கீழ்ப்படியாமல், தொல்பொருள் கட்டளைச் சட்டத்துக்கு அமைய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் வகைகூறலுடன் செயல்படுவது தனது விருப்பம் என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் கூறினார்.

தேசிய தொல்பொருளியல் தினத்தை முன்னிட்டு இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று (07) நடைபெற்ற தொல்பொருளியல் மாகாநாட்டில் கலந்துகொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

பெறுமதி மிக்க தொல்பொருள் தலங்களை உரிய முறையில் பாதுகாப்பதற்கு கடந்த அரசாங்கத்தால் முடியாது போனது என்றும், சில தொல்பொருள் தலங்களில் மேற்கொண்ட பொருத்தமற்ற மறுசீரமைப்பு மற்றும் கட்டுமானங்கள் காரணமாக அந்த தலங்களில் தொல்பொருள் பெறுமதி கூட அழிந்து போய் விட்டது என்றும் அமைச்சர் கூறினார். தொல்பொருள் நிலையங்களின் மரபுரிமையை பாதுகாக்கக் கூடிய நல்ல கண், திறந்த மனம் மற்றும் தேசிய மரபுரிமைகள் தொடர்பான உணர்வுள்ள மனம் கொண்டவர்கள் அவசியம் என்றும், சிலரால் குருட்டுத் தனமான சில முடிவுகள் தீர்மானங்களைக் கொண்டு அத்தகைய குறைபாடுகளை திருத்துவது தொடர்பில் அரசாங்கத்தையும்ம் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரையும் குறை கூறுவது கவலைக்குரியதாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தொல்பொருள் துறையில் ஆய்வுக் கற்கை மற்றும் பன்னாட்டு மட்டத்தில் வினைத் திறனைக் கைக்கொள்ளவும் நமது நாட்டில் தொல்பொருளியல் அலுவலர்களுக்கு வாய்ப்பு வழங்குவது காலத்தின் தேவைப்பாடாகும் என்றும் அதன் பொருட்டு தொல்பொருளியல் திணைக்களத்தின் ஒதுக்கீட்டு நிதிக்கு மேலதிகமாக அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்குத் தான் தயார் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், நவீன பன்னாட்டு பாதுகாப்பு முறைமை மற்றம் அறிவு என்பன எமது தொல்பொருளியல் துறையை மேலுயர்த்துவதற்கு அவசியமானதாகும் என்று வலியுறுத்தினார்.

அவ்வாறே தொல்பொருளியல் துறையில் நடைபெறும் நவீன ஆய்வு கற்கைகள் மற்றும் எழுத்து வாசிப்பு என்பவற்றுக்கு வெளியீட்டு உதவி பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், தொல்பொருளியல் துறையின் வளர்ச்சிக்காக நிபுணத்துவம் பெற்ற பிக்குமார்கள் உள்ளிட்ட சகல நிபுணர்களின் ஒத்துழைப்பை நிரந்தரமாக எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார். இந்த தொல்பொருளியல் மகாநாட்டில் மரபுரிமையை முகாமைத்துவம் செய்தல், சுவரோவியங்கள் மற்றும் துறையின் தொல்பொருளியல் பிரிவின் கீழ் கடந்த ஆண்டில் செய்யப்பட்ட ஆய்வுகளின் பெறுபேறுகள் உட்பட 26 விஞ்ஞானபூர்வ அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.

அத்துடன் தொல் பொருளியல் திணைக்களத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்படும் தாயாத சஞ்சிகை வெளியீடும் தொல்பொருளியல் துறைக்கு உரியதாக தொக்கப்பட்ட 8 நூல்களின் வெளியீடும் அமைச்சரின் தலைமையில் இடம் பெற்றது.

இலங்கையில் தொல்பொருளியல் நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருளியல் நிலையங்கள் சம்பந்தப்பட்ட தகவல் உள்ளடங்கிய புவியியல் தகவல் முறைமை இணையதள நுழைவு (WEB PORTAL) ஆரம்பித்து வைத்தலும் இதன்போது நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியல் தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பீ. பீ. மண்டாவலை, மத்திய பணபாட்டு நிதியத்தினட பணிப்பாளர் நாயகம் திரு பிரசாந்த குணவர்தனா, முன்னாள் தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சிரான் தெரணியகலை உட்பட நிபுணர்கள் பலர் கலந்து கொண்டனர்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.