moe.gov.lk

இரசாயனவியல் வினாத்தாள் ii பகுதியில் இருந்து எடுத்து துண்டுப் பிரசுரத்துக்குள் உள்ளடக்கி இருந்த வினாக்கள் பரீட்சை ஆரம்பமாவதற்கு முன்னர் வெளியாகவில்லை – ஆரம்ப பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

ias-exam“பரீட்சையின் நம்பகத் தன்மை தொடர்பில் எந்த வித பிரச்சினையும் இல்லை” – பரீட்சை ஆணையாளர் நாயகம்.

கம்பகா பிரதேசத்தில் தனியார் வகுப்பு ஆசிரியர் எனப்படும் ஒருவரால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் அடங்கியுள்ள இம்முறை இரசாயனவியல் ii வினாத்தாளில் உள்ளடக்கப்பட்டுள்ள பல வினாத்தாளில் உள்ள பல வினாக்கள் வெளியிடப்பட்டது பரீட்சை நடைபெற்ற சமயத்தின் இறுதிலாகும் என்று ஆரம்ப பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

அதற்கு அமைய அந்த வினாத்தாள் பரீட்சைக்கு முன்னர் வெளிவந்துள்ளது என்று கூறப்படும செய்திகள் முற்று முழுதாக உண்மையற்றவை என்று தெளிவாகின்றது என்றும் பரீட்சையின் நம்பகத் தன்மை தொடர்பில் எந்தவித பிரச்சினையையும் ஏற்படுத்த வேண்டியதில்லை என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் திரு டப். எம். என். புஸ்பகுமார கூறுகின்றார்.

பரீட்சை நடைபெற்ற அன்று காலை பரீட்சை ஆரம்பமான பின்னர் பரீட்சை மண்டபத்தில் இருந்த ஒருவரின் ஊடாக வினாத்தாளில் அடங்கியுள்ள பல வினாக்களை பெற்றுக்கொள்ள முடிந்நது என்று தகவல் வெளியாகியது என்று தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது. அதனைத் தொடர்ந்து திட்டமிட்ட மேலும் சில நபர்கள் இணைந்து தயாரிக்கப்பட்ட குறித்த வினாத்தாள் பரீட்சைடைபெற்ற கால எல்லையில் அச்சிடப்பட்டுள்ளது என்றும் தெரிய வருகின்றது.

நிகழ்வு சம்பந்’தமாக சம்பந்தப்பட்ட தனியார் வகுப்பு ஆசிரியர் என்று கூறப்பட்ட நபரின் தந்தை மற்றும் சகோதரரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் தமது அற்ப இலாபத்தை நோக்கமாகக் கொண்டு இவ்வாறான செயல்களைச் செய்து பிள்ளைகளையும் பரீட்சைத் திணைக்களத்தையும் சங்கடத்துக்கு ஆளாக்கும் இவ்வாறான ஆட்களின் செயற்பாடுகள் வெறுக்கத்தக்க வருந்தக்கூடிய செயல்கள் என்று கூறினார்.

கடந்த காலத்தில் நிகழ்ந்த பரீட்சை மோசடிகள், வினாத்தாள் வெளியே கசிதல் போன்றவற்றை தவிர்த்து பரீட்சைகளை நடத்தும் போது முறையான மற்றும் பாதுகாப்பான முறையொன்றை பின்பற்றி, அது சம்பந்தமான நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ள சமயத்தில் இவ்வாறான தூரதிஷ்ட சம்பவங்கள் ஏற்படுவது வருந்தத்தக்க நிலைமையாபகும் என்று கௌரவ அகில விராஜ் காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.

அவ்வாறே இதற்கு உரியவாறு செயல்பும் பொலிஸ் விசாரணைகளின் பெறுபேறுகள் சம்பந்தமாக விடயங்களை வினவிய அமைச்சர் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்டத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் பொலுசாருக்கு அறிவுறுத்தல் வழங்கினார். இது தொடர்பாக பரீட்சைத் திணைக்களமும் உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளது.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.