"சுரக்‌ஷா தேசிய மாணவர் காப்புறுதித் தினம் டிசெம்பர்-07-2017" நாடு தழுவிய பாடசாலை சார் சமூகத்தினை விழிப்புணர்வூட்டும் விசேட நிகழ்ச்சித் திட்டம்.

Logo-t‘தாய் நாட்டுப் பிள்ளைகளை எப்போதும் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் தேசிய மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சுரக்‌ஷா மாணவர் காப்புறுதி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திசம்பர் 07 ம் திகதி தேசிய சுரக்‌ஷா மாணவர் காப்புறுதி நாள் என்று பெயரிடப்பட்டுள்ளது. சுரக்‌ஷா மாணவர் காப்புறுதியானது, பிள்ளைகளை உடல் மற்றும் உள நலமுள்ளவர்களாக பாதுகாப்பதற்கும், அதன் ஊடாக தாய் நாட்டின் பிள்ளைகளுக்கு மிகவும் நல்ல எதிர்காலத்தை வழங்குவதற்கும் நல்ல வலுவைக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும். இந்த வேலைத் திட்டம் மற்றும் அதன் பயனை அடையக் கூடிய விதம் தொடர்பில் பிள்ளைகள் மற்றும் பெற்றோர் உட்பட பாடசாலை சமூகத்தினருக்கு விளக்கும் தேவை மேலும் எழுந்திருப்பதால் அதன் பொருட்டு திசம்பர் 07 ம் திகதி சுரக்‌ஷா மாணவர் காப்புறுதி தொடர்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை அடிப்படையிலான சமூகத்துக்கு விளக்கும் பொருட்டு தீவு தழுவிய இந்த விசேட வேலைத் திட்டத் நடத்துவதற்கு கல்வி அமைச்சு உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இந்த தீவு தழுவிய வேலைத் திட்டத்தின் நாளான திசம்பர் 07 ம் திகதி வியாழக் கிழமை காலை பாடசாலைக் கூட்டம், இந்த விளக்கும் வேலைத் திட்டம் தொடர்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான துண்டுப் பிரசுரம் போன்று அறிவிக்கும் சொற்பொழிவும் இடம் பெறும். இது தொடர்பான விபரம் அடங்கிய சுற்றறிக்கை சகல பாடசாலைகள், பிரிவேனாக்கள் உட்பட நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் கீழ் செயற்பட ஆரம்பித்துள்ள சுரக்‌ஷா மாணவர் காப்புறுதி வேலைத் திட்டம் அக்டோபர் மாதம் முதலாம் திகதியான உலக சிறுவர் தினம் தொடக்கம் இடம்பெற்று வருகின்றது. இதன் கீழ் ஒவ்வொரு பாடசாலை மாணவருக்கும் ஆண்டென்றுக்கு ரூபா 2 இலட்சப்படி காப்புறதிக்குக் கிடைக்கின்றது. அரசாங்கம் சகல பாடசாலைகள், உதவி நன்கொடை பெறும் தனியார் பாடசாலைகள், தேசிய பாடசாலைகள், மற்றும் பிரிவேனாக்கள் உட்பட 11,242 பாடசாலைகளில் கல்வி பயிலும், பாடசாலை செல்லும் வயதையடைந்த 45 இலட்சம் பிள்ளைகள் உள்ளடக்கப்படுவார்கள். இதன் பயன்கள் இலங்கை காப்புறுதியின் ஊடாகக் கிடைக்கும்.
அதன் பொருட்டு வழங்கப்படும் சகல செலுத்துகைகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும். பிள்ளைகளின் பெற்றோர் இது தொடர்பில் எந்த செலுத்துகையும் செய்யவேண்டியதில்லை. இதற்காக கல்வி அமைச்சு ஒதுக்கியுள்ள தொகை ரூபா 3 பில்லியனாகும்.
சுரக்‌ஷா மாணவர் காப்புறுதியின் கீழ் பாடசாலை பிள்ளையொன்றின் வெளி மருத்துவ சிகிச்சைக்காக ரூபா 10,000/- மும் மருத்துவ மனையில் தங்கு மருத்தும் செய்துகொள்ளும் போது ரூபா 100,000/= மும் தாய் அல்லது தந்தையின் திடீர் ரூபா 75,000/- மும் காப்புறுதி பணமாக்கக் கிடைக்கும். அவ்வாறே பிள்ளை முழு வலுவிழந்த நிலைமையை அடைந்தால் ரூபா 100,000/- மும் பகுதியளவு வலுவிழந்தால் ரூபா 50,000/- முதல் ரூபா 100,000/- வரை என்று பலவித காப்புறுதிப் பயன்கள் கிடைக்கின்றது. இதுவரை பெருந் தொகையான மாணவ மாணவிகள் சுரக்‌ஷா மாணவர் காப்புறுதி பயனாப் பெற்றுள்ளார்கள்.