moe.gov.lk

முப்பரிமாண அச்சுத் தொழினுட்பத்தை பாடசாலை மட்டத்தில் பிரபலப்படுத்த நடவடிக்கை.

3 dவேகமாக மாறிவரும் உலகத்தோடு முன்னேறிச் சென்று தொழினுட்ப சவாலை வெற்றி கொள்ளக் கூடிய பாடசாலை சமூகத்தை இந்த நாட்டில் பாடசாலை முறைமையில் கட்டியெழுப்புவதற்கு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பல விசேட வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படுகின்றன.

அதன்படி, உலகத்தில் வேகமாக வளர்ச்சியடைந்த முப்பரிமாண அச்சிடல் தொழினுட்பத்தை இந்நத நாட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தல், கல்வியின் பொருட்டு பயன்படுத்தல், உலக முப்பரிமாண அச்சிடல் தொழினுட்ப தினத்தை கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டு கல்வி அமைச்சு, மொபிட்டெல் நிறுவனம் மற்றும் RCS 2 (Research Creative Services and Sales) உடன் இணைந்து சில நாட்களுக்கு முன் விசேட முப்பரிமாண அச்சிடல் பாசறை நடாத்தப்பட்டது.

3 d2 3 d1

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகம் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் றோபோ தொழினுட்ப ஆய்வுக் குழாமும் இலங்கையின் முப்பரிமாண தொழினுட்ப நிறுவனங்களின் வளப் பங்களிப்புடன், பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு இந்த முப்பரிமாண அச்சிடல் பாசறையை மூன்று நாட்கள் முழுதும் நடாத்தின. கணினி தொடர்பான முப்பரிமாணம், இலத்திரனியல் மற்றும் முப்பரிமான அச்சிடல் பெற்றிய விரிவான அறிவை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுத்தல், மாணவர்களால் ஆக்கப்பட்ட ஆக்கங்களை மதிப்பிடல் மற்றும் வெற்றி பெற்ற குழாமுக்கு பரிசு வழங்கல் என்பனவும் இதன் போது இடம் பெற்றன.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.