moe.gov.lk

ஈ-கற்றல் செயற்பாட்டை வலுப்படுத்துவதற்கு கல்வி அமைச்சுடன் களனிப் பல்கலைக் கழகம் ஒன்றிணைகிறது.

kel1கல்வியில் தரத்தை அடைவதற்குத் துடிப்புடன் செயற்பட பங்களிப்பு செயற்படக் கூடிய நவீன தொழினுட்ப சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கக் கூடிய மிகச் சிறந் ஆசிரியர்களை உருவாக்குவதற்காக டிஜிட்டல் கற்றல் தொழினுட்பத்தைப் பாடசாலை கல்விப் முறைமையில் ஒன்றிணைப்பதில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் விசேட ஈடுபாடு காட்டியுள்ளார்.

இதன் கீழே, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பத்தின் மூலம் பயன்தரும் ஈ-கற்றல் சூழலை பாடசாலையில் உருவாக்கக் கூடிய வண்ணம் டிஜிட்டல் கற்றல் ஆதாரத்தை உருவாக்குதல், அதற்கு ஆசிரியர்களை பயிற்றுவித்தல், ஆக்கபூர்வமான டிஜிட்டல் கல்வி வேலைத் திட்டங்களை தயாரித்தல் உள்ளிட்ட ஈ-கற்றல் விடயங்கள் பலவற்றை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் களனி பல்கலைக் கழகத்தின் உதவியுடன் அதற்கு உரிய வளவாளர்களின் உதவி மற்றும் டிஜிட்டல் வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, களனிப பல்கலைக் கழகத்தில் கடந்த ஆண்டு கட்டுமானம் செய்யப்பட்ட புதிய கணினித் தொழினுட்ப பீடத்தின் தேசிய ஈ-கற்றல் வள மையத்தைத் தெரிவு செய்து எதிர்வரும் நாட்களில் இந்த டிஜிட்டல் கற்றல் வேலைத் திட்டத்தை தயாரித்தல் மற்றும் குறித்த ஆசிரியர்கள் பயிற்சியில் ஈடுபடுத்தல் எனபன மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

கல்வி அமைச்சு மற்றும் களனி பல்கலைக் கழகத்துக்கு இடையில் இது சம்பந்தமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் கல்வி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. கல்வி அமைச்சின் தரப்பில் கல்வி அமைச்சின் செயலாளர் திரு சுனில் ஹெட்டியாராச்சி, மற்றும் களனிப் பல்கலைக் கழகத்தின் சார்பில் துணை வேந்தர் பேராசிரியர் டி. எம். சேமசிங்க உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.