வரலாற்றில் முதற் தடவையாக கல்வி அமைச்சில் தை பொங்கல் விழா

th1வரலாற்றில் முதற் தடவையாக கல்வி அமைச்சில் தை பொங்கல் விழா இன்று (16) மிகவும் விமர்சையாக கொண்டாடபட்டது. இதற்கு முன்னர் கல்வி அமைச்சில் பொங்கல் விழாக்கள் கொண்டாடியது இல்லை. கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் தூர நோக்கு சிந்தனையில் கல்வி அமைச்சிலும் நாட்டிலும் பாடசாலை மாணவர்களிடமும் இன ஐக்கியத்தையும் சகவாழ்வையும் உறுதிபடுத்தும் முகமாக இந்த தை பொங்கல் நிகழ்வு கல்வி அமைச்சில் கொண்டாடபட்டது.

இந் நிகழ்விற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களினதும் கல்வி அமைச்சின் செயலாளர்களினதும் அதிகாரிகளினதும் உத்தியோகஸ்தர்களினதும் பூரண ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. நிகழ்வில் பொங்கல் பொங்கல் பூஜைகள் நடைபெற்றதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.அங்கு இடம்பெற்ற நிகழ்வுகளை படங்களில் காணலாம்.

th3

 

th4

th6