moe.gov.lk

வெற்றிகரமான சுதந்திரத்தில் உண்மையான உரிமையாளராவோம்.

minister speakஇற்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்னர், 133 ஆண்டு கால ஏகாதிபத்திய ஆட்சியின் முடிவில், நமது நாடு சுதந்திர நாடாக ஆகும் நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. நாட்டை நேசித்து, நாட்டின் சுதந்திரத்துக்காக துணிச்சலுடன் முன்நின்று, இறுதியில் நாட்டுக்காக உயிர் நீத்த சகல மக்கட் சமூகங்களையும் சேர்ந்த சகல இலங்கையர்களுக்கும் மிக விருப்பமான சுதந்திர தினம் என்பதை நாம் இந்த நேரத்தில் சிறதும் மறக்க முடியாது. முதலாவதாக அவர்கள் அனைவருக்கும் உயர்ந்த மரியாதையைசெய்வோம்.

சுதந்திரம் பெற்ற எழுபது ஆண்டு முழுதும் போல், நான் உதயமாகும் எதிர்காலத்திலும் மேலும் சுதந்திரம் பற்றி பேசவும், உண்மையான மனித சுதந்திரத்துக்கு அர்த்தம் கொடுக்கவும் வேண்டும். சிந்தனை, சொல் போன்று வாழ்க்கையில் சுதந்திரத்துக்கும் மனிதர் போராடுகிறார்கள். உலகத்தை மறந்தவர்களாக சிலர் ஒரு தீவு மனநிலைக்கு ஆட்பட்டு சுதந்திரத்தில் விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால், கல்வி, பண்பாடு மற்றும் தொழினுட்பம் ஊடாக நாம் சுதந்திரமாக அபிவிருத்தியடைய நிறைய வாய்யப்புள்ளவர்களாக இருக்கிறோம். பொருளாதாரம், சமூகம் பண்பாட்டில் நாம் உலகில் உயர்ந்து செல்ல முடியும். ஆனால், இன்னும் நம்மில் பெரும்பாலானோம் சுதந்திரத்தை அடையாளம் காணமுடியாதவர்களாக இருக்கிறார்கள். இந்த ஆற்றலற்ற மக்களுக்கு கல்வி அளித்து இன, சாதி மற்றும் சமய வேறுபாடுகளிலிருந்து மீட்கவும், அவர்களை வறுமையில் இருந்து முற்றாக விடுவிக்கவும் நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

இந்த முயற்சியின் பொருட்டு நாட்டின் அபிவிருத்திக்காக முற்று முழுதாக பங்குபற்றுவதற்கான ஆய்வுத் தளத்தில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்துவதற்காக சமீபத்தில் நாம் பல முறைமைசார் கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்துள்ளோம். நாட்டின் கல்வியை வலுப்படுத்தல் புறக்கணிப்பு, அறியாமை மற்றும் அறியாமையற்ற சமுதாயத்தை விடுவிப்பதற்கான ஒரு இன்றியமையாத தேசிய பொறுப்பாகும். அந்த பொறுப்பை நிறைவேற்றி சுதந்திர நாட்டில் சுதந்திரமான குமக்களாக பெருமை வாய்ந்த வாரிசுதாரர்களாக இருப்பதற்கு நாம் உறுதிகொள்வோம்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.