வருடத்தின் இலங்கை ஆசிரியத் தாரகைக்கு பத்து இலட்சம் ரூபா பணப் பரிசு

Photographsஅனைத்து வாழ்க்கைத் தரங்களிலுமுள்ள பயிலுநர்களின் பொறுப்பை ஏற்றுஇ நினைத்துப் பார்க்க முடியுமான அனைத்துச் சவால்களுக்கும் முகங்கொடுத்து ஆசியர்கள் அதிசயமொன்றை நிகழ்துகின்றனர். ஆரம்பப் புள்ளி எதுவாக இருப்பினும்இ ஒவ்வொரு மாணவரினதும் ஆற்றலை உச்ச அளவில் போஷித்து அவர்களை உயர் இலட்சியங்களை நோக்கி அழைத்துச் செல்வதே அந்த அதிசயமாகும். சமுதாயம்இ தனது பிள்ளைகளின் ஆற்றல்களுக்கு ஏற்ப அவர்களின் எதிர்பார்ப்புக்களை நோக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஆசிரியர்களின் ஒப்படைப்பதனால் ஆசிரியர்களை “வாழ்வை மாற்றியமைப்பவர்கள்” அன்று அழைப்பர்.

விருது
தமது சேவையை நிறைவேற்றுவதற்ககா அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற ஆசிரியர்களை கெளரவிக்கும் நோக்கில்இ இலங்கையில் தோன்றிய அதி சிறந்த கிரிக்கெட் வீரரும் 1996 இல் உலகக் கிண்ணத்தை வெல்வதில் முன்னோடியாக இருந்தவருமான அரவிந்த டி சில்வாஇ வருடத்தின் ஆசிரியத் தாரகை விருதை ஆரம்பிப்பதற்காக பத்து இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு முன்வந்துள்ளார். இந்த விருது வழங்கல் இலங்கையின் அனைத்து ஆசிரியர்களுக்குமான திறந்த நிகழ்ச்சியாகும். பிரபல அதிபரான திரு. ஆ.ஐ.ரீ. அலஸ் அவர்களின் வெற்றியை நினைவுகூர்ந்த அரவிந்த டி சில்வாஇ திரு. அலஸ் போன்ற அதி சிறந்த ஆசிரியர்களை தேசத்தைக் கட்டியெழுப்புவர்களாகக் கருத வேண்டும் என்று கூறினார். காலஞ் சென்ற தனது தந்தை திரு. சேம் டி சில்வா அவர்களைப் பற்றியும் எனது மனைவி திருமதி அனுஷ்கா டி சில்வா அவர்களைப் பற்றியும் குறிப்பிட்ட திரு. அரவிந்த டி சில்வாஇ தனது தந்தை தனியார் துறையில் இணைய முன்னர் ஆசிரியராகப் பணியாற்றியதாகக் கூறினார். மேலும்இ தனது மனைவி அனுஷ்கா டி சில்வா தன்னார்வ அடிப்படையில் விசேட தேவைகளையுடைய பிள்ளைகளுக்கு கற்பிற்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார். தான் தற்போதுள்ள நிலையை அடைவதற்கு இவர்களின் ஆசீர்வாதம் பல வழிகளிலும் பங்களிப்புச் செய்துள்ளதாக அவர் நன்றியுடன் நினைவுகூர்கிறார். தகைமைகள்
“வருடத்தின் இலங்கை ஆசிரியத் தாரகை” இலங்கையிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்குமான ஒரு திறந்த நிகழ்ச்சியாகும். அரசாங்கஇ தனியார்இ சர்வதேச பாடசாலை போன்ற வேறுபாடுகளைக் கவனத்திற் கொள்ளாது இவ்விருது வழங்கப்படும். அந்த ஆசிரியர்கள் குறிப்பாக இலங்கைப் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக அபிவிருத்திக்காகவும் உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்களா என்பது மாத்திரமே கவனத்திற் கொள்ளப்படும். இந்த விருது வழங்களின் அனைத்து நடைமுறைகளும் “சர்வதேச ஆசிரியர் பேரவை” (ஐகுவூ) இனால் முகாமை செய்யப்படுகின்றன. இதற்கு கேட்வே பட்டப் பாடநெறியே (கேட்வே கூட்டுக் குழுமத்தின் கல்வி மற்றும் தொழில் அபிவிருத்தி நிறுவனம்)இ முன்னொடியாக அமைந்ததுடன்இ பியர்சன் எடெக்சல்இ நோட்டின்ஹெம் பல்கலைக்கழகம் என்பனவும் அதில் இணைந்து கொண்டுள்ளன. ஆசிரியத் தாரகையைத் தெரிவு செய்யும் பணி 2018 ஜூலை மாதத்தில் பூர்த்தி செய்யப்படும் என்பதுடன் அதற்கான முன்மொழிவுகளைப் பொறுப்பேற்பது 2018 மே மாதத்தில் முடிவடையும். வெற்றிபெறும் ஆசிரியத் தாரகைக்கான பரிசளிப்பு 2018 ஜூலை 14 ஆந் திகதி கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.

விருதுக்கான அளவுகோள்கள்

ஒவ்வொரு முன்மொழிவு தொடர்பிலும்இ பின்வரும் அளவுகோள்களின் கீழ் சமர்ப்பிக்கப்படும் சான்றுகள்இ “விருதுத் தெரிவுக் குழு”வினால் மதிப்பீடு செய்யப்படும்.
1. ஒருவர் நிறுவனமொன்றிலும் பரந்த ஆசிரிய சமுதாயத்திலும் முன்மாதிரியானவராக இருத்தல்.
2. வகுப்பறையிலும் அதற்கு வெளியிலும் புத்தாக்கமான ஆசிரியச் செயற்பாடுகளின் ஊடாக மாணவர்களின் கற்றல் செயன்முறைகளுக்கு உதவுதல்.
3. இலங்கையின் உள்ளேயும் அதற்கு வெளியிலும் கற்றல்இ கற்பித்தல் கல்வித் தரத்துடன் இணைந்த விடயங்களின் மேம்பாட்டுக்காகச் செய்துள்ள போதனைப் பங்களிப்பு.
4. மாணவர்கள் மத்தியில் தொடர்ச்சியான கல்வித் திறன்களின் வெற்றிக்காகச் செய்யும் பங்களிப்பு.
5. மாணவர்கள் மத்தியில் இணைப்பாட விதானத் திறன்களின் வெற்றிக்காகச் செய்யும் பங்களிப்பு.
6. ஆசிரிய சேவையின் பின்னர் ஏனைய உன்னத செயற்பாடுகள் மூலம் பரந்த சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு வழங்கும் பங்களிப்பு. விருதுத் தெரிவுக் குழுவின் அங்கத்தவர்கள்இ முன்மொழியப்பட்டவர்களுக்காகச் சமர்ப்பிக்கப்படும் சாட்சிகளின் எண்ணிக்கையையன்றிஇ அவற்றின் தரத்தையே கவனத்தில் எடுப்பார்கள்.

வெளிப்படைத் தன்மையுடன் கூடிய செயன்முறை
கல்வித் துறையில் சிறப்புற்று விளங்கும் பிரபலமான வாண்மைத் தொழில்வல்லுநர்கள் ஐவரைக் கொண்ட விருதுக்கான தெரிவுக் குழு இச்செயன்முறையை மேற்பார்வை செய்யும். இந்த அங்கத்தவர்களில் நான்கு பேர் இலங்கையர்களாகவும் ஒருவர் சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்ற இலங்கையரல்லாத கல்வியியலாளராகவும் இருப்பார். ஒவ்வொரு முன்மொழிவுடனும் பின்வருவோரிடமிருந்து பெறப்பட்ட துணைக் கடிதமொன்றும் காணப்பட வேண்டும்.

1. முன்மொழியப்பட்டவர் ஆசிரியராகப் பணியாற்றும் கல்வி நிறுவனத்தின் தலைவர்.
2. முன்மொழியப்பட்டவர் ஆசிரியராகப் பணியாற்றும் கல்வி நிறுவனத்திலுள்ள ஒரு சக ஊழியர். துணைக் கடிதத்துக்கு மேலதிகமாகஇ முன்மொழியப்படுபவரின்இ முன்மொழிபவரின் அறிமுகஃமுகப்புக் கடிதமொன்றுஇ முனமொழிபவரின் தகைமைகள் மற்றும் அதற்கான சாட்சிகள் (ஆவணங்கள்இ வீடியோக்கள்இ தகவல் ஆக்கங்கள்இ வெளியிடப்பட்ட ஆக்கங்கள்இ சான்றிதழ்கள்இ முன்மொழிபவரால் உருவாக்கப்பட்ட கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் வெளியிடப்பட்ட புத்தகங்கள்) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முன்மொழிவுப் படிவம் மற்றும் மேலதிக தகவல்கள்
“வருடத்தின் இலங்கை ஆசிரியருக்கான முன்மொழிவு மாதிரிப் படிவத்தை’ சர்வதே ஆசிரியர் பேரவையின் (ஐகுவூ) றறற.கைவ.டம என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் விருது வழங்கல் தொடர்பான தகவல்களைப் பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக ருஷிகா அல்லது இஷி ஆகியோரில் ஒருவரைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும். 0772256356இ 0112695103 மற்றும் 0112695107 அல்லது இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுவதன் மூலமும் பெற்றுக் கொள்ள முடியும். iகெழ@கைவ.டம உயர் அபிவிருத்தி கொண்ட நாடுகளில் மிகச் சிறந்த மனப்பாங்கை உடையவர்களாக ஆசிரியர்கள் விளங்குவதுடன் அவர்கள் அத்தொழிலை மிக உயர்வாக மதிக்கின்றனர். இலங்கை உலகுடன் போட்டிபோடக் கூடிய நிலையை அடைய வேண்டுமாயின்இ தேர்ச்சி நிறைந்த இளைஞர்களை இந்த உன்னதமான தொழிலுக்கு கவர்வது அவசியமாகும். “வருடத்தின் இலங்கை ஆசிரியத் தாரகை” விருது மற்றும் “சர்வதேச ஆசியர் பேரவை” என்பன ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்தும் ஒரே நோக்கில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அவர்களின மகத்தான சேவையைப் பாராட்டுகின்றது.