மாகாண/வலய தகவல்தொடர்பாடல் தொழிநுட்ப நிலைய விரிவரையாளர்களுக்கான குறுகிய கால பயிற்சிச் சந்தர்ப்பம்

மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சித் திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள விரிவுரையாளர்களுக்கான நேர்முகப் பரீட்சை 2018.10.12 ஆம் திகதி மு.ப. 9.00 மணிமுதல் கல்விமைச்சின் 4 ஆம் மாடியில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பக் கிளையில் நடைபெறும். இதற்குச் சமூகமளிக்கும்போது கீழுள்ள ஆவணங்களைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தயவுடன் வேண்டுகின்றேன்.

  1. பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம்
  2. கல்வித் தகைமைச் சான்றிதல்கள்
  3. தொழிற் தகைமைச் சான்றிதல்கள்​
  4. மேற்கொள்ளப்பட்ட சேவைகள் தொடர்பான பாராட்டுக் கடிதங்கள் மற்றும் உறுதி செய்யக்கூடிய ஆவணங்கள்
  5. விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை உறுதி செய்யக்கூடிய ஆவணங்கள்
  6. ஒழுக்காற்று / கணக்காய்வு விசாரணைகள் இல்லை என்பதற்கான வலயக் கல்விப் பணிப்பாளர் மூலம்பெறப்பட்ட கடிதம்

(இதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப இணைப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தின் பிரதியொன்று இங்கு காணப்படுகிறது.)

விண்ணப்ப்ப் படிவங்களுகமைவானநேர்முகப் பரீட்சைக்கான நேரம் 2018.10.09 ஆம் திகதி வலைத் தளத்தில் வெளியிடப்படும்