சுரக்‌ஷா காப்புறுதி நன்மைகள் அதிகரிக்கப்படுகிறது.

su tசுரக்‌ஷா காப்புறுதி திட்டத்தை 2019 ம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அனுமதியை கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டம் வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு சுரக்‌ஷா காப்புறுதி நன்மையை வழங்குவதில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு, அரசாங்கத்துக்கு குறைந்த செலவும் பிள்ளைகளுக்கு நிறைந்த நன்மையும் ஏற்படும் வண்ணம் 2018/19 ஆண்டுக்கான புதிய முன்மொழிவுகளை உள்ளடக்குவதற்கு கல்வி அமைச்சர்கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டில் படி கல்வி அமைச்சு நடிவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, 2018/19 ஆண்டில் மருத்துவமனை தங்குவதற்கு ரூபா200,000/= மும், அரசாங்க மருத்துவமனையில் அல்லது அரசாங்க ஆயுர்வேத மருத்துவமனையில் கட்டணமற்ற வார்டில் சிகிச்சை பெறும்போது நாளொன்றுக்கு ரூபா 3,000/= மும், வெளியில் சிகிச்சை பெறும்போது ரூபா 20,000/= மும், பெற்றோர் அல்லது காப்பாளர் காலமானால் ஒருவருக்கு ரூபா 200,000/- மும், மாணவர் காலமானால் இறுதிச் சடங்குகளுக்கு ரூபா 150,00/= மும், முழு மற்றும் நிரந்தர ஊனமடைந்தால் ஆண்டுக்கு ரூபா 50,00/= முதல் ரூபா 200,000/= வரையும், குணமாக்கவியலாத கடும் நோய்களுக்கு ரூபா 200,000/= என்று மாணவரும் பெற்றோரும் நன்மைக்கு உரித்தாவர்.

2018ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2019 ல் வழங்கப்படும் நன்மைகள் அதிகமாகும்.

காப்புபெறும் சந்தர்ப்பம்

நன்மை

2018

2019

மருத்துவமனைகள் / நோய்க்கான நன்மை

         வதிவிட சிகிச்சை நன்மை (அரசாங்க / தனியார்)

         அரசாங்க மருத்துவமனையில் தங்கி சகிச்சைபெறல் (நாளொன்றுக்கு)

         வெளிச் சிகிச்சை நன்மை

200,000

1,000

10,000

200,000

3,000

20,000

விபத்து நன்மைகள்

         முழு நிரந்தர உதவிக்காக

100,000

50,000-100,000

200,000

50,000- 200,000

காலமாதல் / இறத்தல்

        பெற்றோர் காலமானால்

         மாணவர் காலமானால் இறுதிச் சடங்கு உதவி

75,000

100,000

200,000(ஒருவருக்கு மாத்திரம்)

150,000

குணமாக்கவியலாத கடும் நோய்க்கான நன்மை

-

200,000(அல்லது அதற்கதிகம்)