முதலாவது தவணை பாடசாலை விடுமுறை ஏப்ரில் 28 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

sch vacationஇரண்டாவது பாடசாலை தவணை ஏப்ரல் 29 ஆம் திகதி திங்கள் அன்று ஆரம்பமாகின்றது. 

2019 ஆம் வருட முதலாம் தவணை விடுமுறை ஏப்ரல் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதோடு அதற்கமைய இரண்டாம் பாடசாலை தவணைக்காக சகல அரச பாடசாலைகளும் ஏப்ரல் 29 ஆம் திகதி திங்கள் அன்று திறக்கப்படுமென கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறியூள்ளார்.
அத்தோடு நாட்டின் தேசிய கல்வியியற் கல்லூரிகளின் பயிலுனர்கள் தற்போது வதிவிடத்துடன் கூடிய கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதால் அவர்களுக்கான பரீட்சை ஏலவே அறிவிக்கப்பட்டவாறு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் நடத்தப்பபட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவூறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.