moe.gov.lk

கல்வி அசை;சரினால் ஆசிரிய நியமனங்களை பெற்றுத் தருவதாக உறுதியளித்து பணத்தை கொள்ளையடிக்கும் வஞ்சகர்களிடம் கவனமாக இருங்கள். அவ்வாறான நபர்கள் தொடர்பான தகவல் தெரிந்தவூடன் உடனே கல்வி அமைச்சுக்கு தெரிவிக்கவூம். கல்வி அமைச்சினால் மக்களிடம் ஒரு வேணடுகோள்;

bribesபாடசாலைகளில் ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொடுக்கப்படும் என கஷ்டமான கிராமங்களில் வாழும் மக்களை திசைதிருப்பி போலி கடித ஆவணங்களை தயாரித்துஇ ஒரு நியமனத்திற்கு தலா ரூபா 1இ50இ000 வைப் பெற்றுககொண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்டு ஏமாற்றும் செயற்பாடு தொடர்பாக அண்மையில் (08) கல்விஇ விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அலஹப்பெரும அவர்களுக்கு தகவல் திடத்துள்ளது.

தேரர் ஒருவரினால் மிகவூம் பொறுப்புடன் தமக்கு வழங்கப்பட்ட இந்த தகவல் தொடர்பில் உடனே நடவடிக்கை மேற்கொண்ட கல்வி அமைச்சர்; இது குறித்து காவல் துறையினரை அறிவூறுத்தி அதன் பிரகாரம் ஏலவே இரு சந்தேக நபர்களை கைது செய்வதற்கு முடிந்துள்ளது

ராஜாங்கனை பிரதேசத்தில் வசிக்கும் யூவதி ஒருவருக்கு ஆசிரிய நியமனம் வழங்குவது தொடர்பாக இவ்வாறு பணம் பெற்றுககொண்டவர்கள் குறிப்பிட்ட கிராமத்து பெண் மற்றும் அவரின் பெற்றௌர்களுக்குஇஇந்த நியமனம் அமைச்சரின் கைகளால் இன்று வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள.;. சுந்தேக நபர்களுக்கு இது தொடர்பான தகவல்களை அமைச்சில் பணிபுரிகின்ற சில குழுக்களினால் வழங்க்கப்பட்டுள்ளது என ஏலவே தகவல்கள் வெளியாகியூள்ள நிலையில்இ இவ்வாறான செயற்பாடுகள் மற்றும் மக்களை ஏமாற்றி பணம் பெறுதல் கடந்த காலங்களில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்தவண்ணம் உள்ளன.

இவ்விடயம் தொடர்பாக மிகவூம் விழிப்புடன் இருக்கும் கல்வி அமைச்சு அவ்வாறான நபரிடம் அல்லது குழுக்களிடம் ஏமாற வேண்டாம் எனவூம் பொய்யான உறுதிமொழிகளை வழங்கி பணத்தை கொள்ளையடிப்பவர்கள் குறித்து தகவல் கிடைக்கும் பட்சத்தில் உடனே கல்வி அமைச்சின் அவசர தொலைபேசி எண் 1988 ற்கு அறிவிக்கும்படியூம் தெரிவித்துள்ளது.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.