moe.gov.lk

பாடசாலை வழங்கல் கிளை

 


பாடசாலை வழங்கல் அலகு (5 ம் மாடி)


 

 

நோக்கக்கூற்று:
கல்வி முறைமையில் பாடசாலை மற்றும் நிறுவனங்களின் இயக்கத்துக்குத் தேவையான கற்றல் கருவிகளை களஞ்சியப் படுத்தி,, கால தாமதமின்றி, தரத்தில் சற்றும் குறைவடையாதவாறு, விரைவாக குறிப்பிட்ட இடத்திற்குக் கொண்டுசென்று ஒப்படைத்து கல்விக்கான சேவையை சிறந்த முறையில் ஆற்றல். 

பணிக்கூற்று:

பொதுவான கற்றல் கருவிகளைத் தீவின் அனைத்து தேசிய பாடசாலைகளுக்கும், சிறப்பான கற்றல் கருவிகளை,பொறுப்பு வாய்ந்த மாகாண மற்றும் வலயக் கல்வி அலுவலர்களின் தொடர்புகளுக் கேற்ப குறிப்பிட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் மற்றும் கல்விக் கல்லூரிகள், ஆசிரியர் நிலையங்கள் போன்ற கல்வி நிறுவனங் களுக்கும் மேலே குறிப்பிட்டவாறு பகிர்ந்தளித்தல்.

பணிகள்:

 

  • வழங்கல் கிளை மற்றிம் இணைப்பு வலைப் பின்னல் கீழ் வருமாறு சமகாலத்தில் இடம்பெறல் வேண்டும். பாடசாலை முறைமையில் பாடத்திட்டம், உயர் தரத்தில் அமைவதற்காக, பாடசாலை பணிப்பாளர்களால் கற்றல் துணைக் கருவிகளின் தேவைப்பாட்டைக் கணக்கெடுத்து,  பிறகு நடுவண் அமைச்சினூடாகக் கொள்வனவு செய்து, பகிர்ந்தளிக்கப்படும் பொருட்களைப் பற்றி முடிவு செய்து கொள்வனவு அலகுக்கூடாக கொள்வனவுக் கட்டளை விடுத்து கொள்வனவு செய்தல். தரத்தினைப் பற்றி ஆய்வுக் குழுவின் இசைவினைப் பெற்ற பின், முறைப்பபடி களஞ்சியத்தில் பொறுப்பேற்ற பொருட்களை அந்தந்த குறிப்பிட்ட பணிப்பாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட பட்டியல்களுக்கேற்ப பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்தல் இக் கிளையின் தலையாய பொறுப்பாகும். அதன் பொருட்டு, செயற்பாடுகளை ஒழுங்கமைத்து தேவைக்கேற்ப வாகன வசதிகளை ஏற்பாடு செய்து, தேசிய பாடசாலைகளுக்கும், சிறப்பான சந்தர்ப்பங்களின்  கீழ்  மாகாண மற்றும் வலயங்களுடன் தொடர்பு கொண்டதற் கேற்ப  மாகாணப் பாடசாலைகளுக்கும் பொருள்களை வழங்குதற் கேற்ப  செயலாற்றுப் பொறிமுறையினை செயல்படுத்தலும் இதன் பொறுப்பாகும்
  • இதைத் தொடர்ந்து பல வேறு வாய்ப்பாக நன்கொடையாகவும், உதவியாவும் பெற்றுக் கொள்ளப்படும் கற்றல் துணைக் கருவிகளை குறிப்பிடப்படும் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளித்தலும் அவ்வப்போதைய சிறப்பான நிலமைகளுக்கு ஏற்ப நிறைவேற்ற வேண்டும்,
  • இதன்படி, இரசாயனப் பொருட்கள், அழகியல் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், கணனி-மின் பொருட்கள் போன்ற பல்வேறு பாடங்களுக்குரிய துணக் கருவிகள் பெருமளவில் 341 தேசிய பாடசாலைகளுக்கும் பகிர்ந்தளிப்பதுடன், அதற்கு மேலாக இரசாயனப் பொருட்கள் போன்ற சிறப்பான பொருட்கள், அன்பளிப்பு மற்றும் நன்கொடை யாவற்றையும் குறிப்பிட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் பகிர்ந்தளித்தல் போன்ற மிகப் பெரிய வகைகூறக்கூடிய பொறுப்புகள் இந்த கிளைக்கு வழங்கப் பட்டிருக்கினறன.

அதற்கேற்ப,

  • அவ்வப் ’பொருட்களின் தரத்தைப் பேணும் வண்ணம் கையாளல்,
  • பெறுமதி மிக்க சிறப்பான பொருட்களுக்காக உயரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல்
  • வரையறுக்கப்பட்ட மனித வளம் மற்றும் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் கொணடுபோய் ஒப்படைத்தல்.

தெளிவான விளக்கத்துடனும் தொடர்பாடலுடனம் இச் செயற்பாடுகள் இடம் பெற வேண்டும்.


அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்:

பதவி தொலைபேசி எண் தொலைமடல்
நேரடி இடைத்தொடர்பு
கல்விப் பணிப்பாளர் 011-2784838 1517 011-2784838 
 கிளை 011-2784838  1516  

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.