moe.gov.lk

Latest news

tt devi

இடமாற்றத்துக்கு எதிராக மாணவர்களைத் தூண்டிவிடும் ஆசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – கல்வி அமைச்சர் கூறுகிறார்.

சிலருக்காகவன்றி பொது நல்லைனை முன்னிட்டு சழரிய தீர்மானத்தை எடுப்பது எனது பொறுப்பு என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்கள் கூறினார்கள். எல்லோரையும் ஆறுதல்படுத்துவதற்காக ஐஸ்கிறீம் வாங்கிக்கொடுப்பது கல்விக் கொள்கை அல்ல என்று குறிப்பிட்ட அமைச்சர் கல்வித் துறையின் மேன்மையின் பொருட்டு அச்சமின்றி முடிவெடுப்பதற்கு ஆயத்தமாக இருப்பதாகச் சுட்டிக் காட்டினார்.

கொழும்பு தேலி பாலிகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிய சிறுவர் சித்திரப் போட்டியில் பெற்ற பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு கல்வி அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட தேசிய பாடசாலைகள் ஆசிரிய இடமாற்ற பற்றிய வேலைத் திட்டம் தொடர்பில் அமைச்சர் விளக்கமளித்தார்.

Read more ...

scho

விசேட திறமை கொண்ட பிள்ளைகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பான புலமைப் பரிசில் வேலைத் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளல் செப்டம்பர் 06 ம் திகதி முடிவடைகிறது.

கௌரவ கல்வி அமைச்சரின் தீர்மானத்துக்கு அமைய விளையாட்டு, கலை மற்றும் ஆக்கத் துறைகளில் விசேட திறமை காட்டும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் ஜூலை மாதம் 31 ம் திகதி ஆரம்பமாகியது. விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளல் செப்டம்பர் 06 ம் திகதி முடிவடைகிறது.

ளும் ஊடாக விளையாட்டு, அழகில் செயற்பாடுகள் மற்றும் புதிய ஆக்கங்களுக்கு 3 விசேட பிரிவுகளின் கீழ் புலமைப் பரிசில் வழங்கப்படும்.
இது தொடர்பான உரிய விண்ணப்ப படிவம் மற்றும் மேலதிக விபரங்களை www.moe.gov.lk என்ற கல்வி அமைச்சின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

notice

பட்டப்பின் கல்வி டிப்ளோமா (உள்வாhp) முழுநேரப் பாடநெறிக்காக ஆட்சேHத்தல் - 2018

கல்வியமைச்சின் தேசிய கல்வியியற் கல்லூhpகள் கிளையின் இணைப்பாக்கத்தில் கொழும்புஇ பேராதெனிய மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களில் நடைபெறவூள்ள பட்டப்பின் கல்வி டிப்ளோமா (உள்வாhp) முழுநேரப் பாடநெறிக்கு 2018 ஆம் கல்வி ஆண்டுக்காக விண்ணப்பதாhpகளை சேHத்துக்கொள்வதற்கான அரச வா;த்தமானி அறிவித்தல் 2017 ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்படவூள்ளது.

 

Click here for download the gazette

ias-exam

இரசாயனவியல் வினாத்தாள் ii பகுதியில் இருந்து எடுத்து துண்டுப் பிரசுரத்துக்குள் உள்ளடக்கி இருந்த வினாக்கள் பரீட்சை ஆரம்பமாவதற்கு முன்னர் வெளியாகவில்லை – ஆரம்ப பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

“பரீட்சையின் நம்பகத் தன்மை தொடர்பில் எந்த வித பிரச்சினையும் இல்லை” – பரீட்சை ஆணையாளர் நாயகம்.

கம்பகா பிரதேசத்தில் தனியார் வகுப்பு ஆசிரியர் எனப்படும் ஒருவரால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் அடங்கியுள்ள இம்முறை இரசாயனவியல் ii வினாத்தாளில் உள்ளடக்கப்பட்டுள்ள பல வினாத்தாளில் உள்ள பல வினாக்கள் வெளியிடப்பட்டது பரீட்சை நடைபெற்ற சமயத்தின் இறுதிலாகும் என்று ஆரம்ப பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

அதற்கு அமைய அந்த வினாத்தாள் பரீட்சைக்கு முன்னர் வெளிவந்துள்ளது என்று கூறப்படும செய்திகள் முற்று முழுதாக உண்மையற்றவை என்று தெளிவாகின்றது என்றும் பரீட்சையின் நம்பகத் தன்மை தொடர்பில் எந்தவித பிரச்சினையையும் ஏற்படுத்த வேண்டியதில்லை என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் திரு டப். எம். என். புஸ்பகுமார கூறுகின்றார்.

Read more ...

spo

அரசாங்க பாடசாலைகளில் விளையாட்டுப் பயிற்சியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல் – 2017

க. பொ. த. (உயர் தரத்தில்) சித்தி பெற்றவர்கள், நேர்முகத் தேர்வுக்கு சமூகமளிக்க இயலாது போய்விட்ட விண்ணப்பதாரிகளுக்கு நேர்முகப் பரீட்சை 2017 – 08 – மற்றும் 29 ஆகிய இரு தினங்களிலும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து இந்த நேர்முகத் தேர்வின் பெறுபேறுகளை 2017 – 09 – 20 ம் திகதிய கல்வி அமைச்சின் உத்தியோக பூர்வ இணைய தளத்தில் (www.moe.gov.lk) பெற்றுக் கொள்ளலாம். 

நேர்முகத் தேர்வில் சித்தியடைந்த விண்ணப்பதாரிகளுக்கு பெறுபேறுகளை அஞ்சலில் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

mus

முஸ்லீம் பாடசாலைகளின் இரண்டாவது தவணையின் இரண்டாவது கட்ட இறுதித் திகதி மாற்றம்...

அனைத்து முஸ்லீம் பாடசாலைகளின் இரண்டாவது தவணையின் இரண்டாவது கட்டத்தின் இறுதித் திகதியையும் மூன்றாவது தவணையின் ஆரம்ப திகதியையும் மாற்றுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அனைத்து முஸ்லீம் பாடசாலைகளின் இரண்டாவது தவணை இரண்டு கட்டமாகப் பிரிக்கப்பட்டு விடுமுறை வழங்கப்பட்டது. அதன் முதலாவது கட்டத்தில் 2017.05.27 முதல் 2017.06.27 வரை விடுமுறை வழங்கப்பட்டது. இரண்டாவது கட்டத்தில் (நாளை) 2017.08.18 முதல் 2017.08.27 வரை விடுமுறை வழங்கப்படவிருந்தது. எனினும் செப்டம்பர் 01 ம் திதகி இடம் பெறும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு அந்த விடுமுறை நாட்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதனால், அனைத்து முஸ்லீம் பாடசாலைகளின் இரண்டாவது தவணையின் இரண்டாவது கட்டத்திற்காக நாளை முதல் வழங்கப்படவிருந்த விடுமுறை இரத்து செய்யப்பட்டு அதற்குப் பதிலாக 2017.08.31 முதல் 2017.09.08 வரை விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

முஸ்லீம் பாடசாலைகளின் மூன்றாவது தவணை 2017.09.11 திங்கட் கிழமை ஆரம்பமாகும்.

scho

விசேட திறமை கொண்ட பிள்ளைகளை ஊக்குவிப்பதற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நற் புலமைப்பரிசில் வேலைத் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சர் கௌரவ அகி விராஜ் காரியவசம் அவர்களின் கருத்துக்கு அமைய, 2017 ம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட யோசனையின் கீழ் விழைளயாட்டு, கலை மற்றும் ஆக்கத்துறைகளில் விசேட திறமை காட்டும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக கல்வி அமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நற் புலமைப்பரிசில் வேலைத் திட்டத்துக்கு விண்ணப்பங்களை கோரும் செயற்பாடு நேற்று ஆரம்பமாகியது. எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளத் கூடிய முக்கியமானவற்றில் திறமை கொண்ட ஆக்கத் பிள்ளைகள் பரம்பரையை உருவாக்குதற்கான செயற்பாட்டில் நுழைந்துள்ள இந்த புலமைப் பரிசில் வேலைத் திட்டத்தின் மூலம் கெட்டிக்கார மாணவர்களின் விசேட திறமைகனை அபிவிருத்தி செய்தலும், நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பை வழங்கும் வண்ணம் அத்தகைய விசேட திறன்களை மேலும் வளர்ப்பதற்கும் ஊக்கவித்தல் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புலமைப் பரிசில் புது ஆக்கங்கள், அழகியற் செயற்பாடுகள் மற்றும் விளையாட்டு போன்ற 3 விசேட பிரிவுகளின் கீழ் வழங்குவது நோக்கமாகும்.

Read more ...

dance

கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலை நாட்டியப் போட்டி – 2017

ஜூலை மாதம் 29 மற்றும் 30 ம் திகதிகளில் கம்பகா கல்வி வலயத்தில் அமைந்துள்ள 13 பாடசாலைகளை மையமாகக் கொண்டு நடைபெறவிருக்கின்றன.

ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையுள்ள மாணவர்கள் உள்ள பாடசாலைகளுக்காக ஜூலை 29 ம் திகதி போட்டிகள் நடாத்தப்படும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையுள்ள மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்காக ஜூலை 30 ம் திகதி போட்டிகள் நடாத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்முறை அகில இலங்கை பாடசாலை நாட்டியப் போட்டியில் கலந்து கொள்ள தீவு முழுதுமுள்ள ஆயிரம் பாடசாலைகளில் இருந்து இருபதாயிரம் வரையிலான மாணவ மாணவிகள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

youth

தகவல் தொழினுட்ப முதன்மைத் திட்டமொன்றைத் தயாரித்தல் வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் ஆலோசனையின் படி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பத்தினை கருத்தில் கொண்டு நிறுவப்பட்டு இருக்கும் யுனெஸ்கோ ஒத்துழைப்பு குழுவின் தலைமையில் நடைபெற்றுவரும் இரண்டாவது செயலமர்வை 2017 ஜீலை மாதம் 17 ம் திகதி முதல் 20 ம் திகதி வரை வௌளவத்தை மிராஜ் ஹோட்டலில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுளன. அதன் ஆரம்ப நிகழ்வு கல்வி அமைச்சின் செயலாளர் திரு சுனில் ஹெட்டியாராச்சி தலைமையில் 17 ம் திகதி முற்பகல் 9. 00 மணிக்கு நடைபெற்றது.

Read more ...

prii

“எந்தவித அரசியல் சக்திக்கும் அடிபணியாமல் தொல்பொருள் தலங்களை மேலுயர்த்துவதற்காக பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுகின்றேன்” – கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்.

நமது நாட்டின் பெறுமதி மிக்க தொல்பொருளியல் தலங்கள் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் வரை இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் அந்த பெறுமதிமிக்க தொல்பொருள் நிலையங்கள் மற்றும் தொல்பொருளியல் சார்ந்தவைகளையும் பாதுகாப்பதற்காக எந்தவொரு அரசியல் சக்திக்கும் கீழ்ப்படியாமல், தொல்பொருள் கட்டளைச் சட்டத்துக்கு அமைய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் வகைகூறலுடன் செயல்படுவது தனது விருப்பம் என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் கூறினார்.

தேசிய தொல்பொருளியல் தினத்தை முன்னிட்டு இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று (07) நடைபெற்ற தொல்பொருளியல் மாகாநாட்டில் கலந்துகொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

Read more ...

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.