moe.gov.lk

Latest news

th1

வரலாற்றில் முதற் தடவையாக கல்வி அமைச்சில் தை பொங்கல் விழா

வரலாற்றில் முதற் தடவையாக கல்வி அமைச்சில் தை பொங்கல் விழா இன்று (16) மிகவும் விமர்சையாக கொண்டாடபட்டது. இதற்கு முன்னர் கல்வி அமைச்சில் பொங்கல் விழாக்கள் கொண்டாடியது இல்லை. கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் தூர நோக்கு சிந்தனையில் கல்வி அமைச்சிலும் நாட்டிலும் பாடசாலை மாணவர்களிடமும் இன ஐக்கியத்தையும் சகவாழ்வையும் உறுதிபடுத்தும் முகமாக இந்த தை பொங்கல் நிகழ்வு கல்வி அமைச்சில் கொண்டாடபட்டது.

இந் நிகழ்விற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களினதும் கல்வி அமைச்சின் செயலாளர்களினதும் அதிகாரிகளினதும் உத்தியோகஸ்தர்களினதும் பூரண ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. நிகழ்வில் பொங்கல் பொங்கல் பூஜைகள் நடைபெற்றதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.அங்கு இடம்பெற்ற நிகழ்வுகளை படங்களில் காணலாம்.

th3

 

th4

th6



ds1

‘புதிதாக அச்சிடப்பட்ட பாடநுல்களை இரண்டு ஆண்டுகாலம் பயன்படுத்துவதற்கு மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு எடுத்த தீர்மானம் நல்ல எண்ணத்துடன் எடுத்த தீர்மானமாகும் – கல்வி அமைச்சர் கூறுகிறார்.

“சாதாரண தரப் பரீட்சையின் சகல ஏற்பாடுகளையும் திசெம்பர் மாதத்திலேயே நிறைவு செய்வமற்கு வருங் காலத்தில் நடவடிக்கை – விடைத்தாள் திருத்துநர்களின் கொடுப்பனவை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” – கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்.
அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு இலவசமாகத் தரப்படும் பாடநூல்களை குறைந்த்து இரண்டு ஆண்டுகளுக்காவது பயன்படுத்துவதற்கு மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கு எடுத்த தீர்மானம் நல்லெண்ணத்துடன் எடுத்த தீர்மானம் என்று கல்வி அமைச்சர் கூறினார் இன்று (11) கொழும்பு டீ. எஸ். சேனானாயக்கா வித்தியாலயத்தில் இடம் பெற்ற 2018 ம் ஆண்டுக்கான பாடநூல் பகிர்தளிக்கும் தேசியபெருவிழாவில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

Read more ...

gr1

2018 ஆண்டில் முதலாம் தரத்தில் மாணவர்களைச் சேர்த்தல் 2018 ஜனவரி 15 ம் திகதி ....

முதலாம் தரத்தி மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் தேசிய விழா ஒவ்வோராண்டும் இடம் பெறுகின்றது என்றும் இவ்வாண்டு முதலாம் தரத்தில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் தேசிய விழா ஜனவரி மாதம் 15 ம் திகதி கொழும்பு இசிபத்தான வித்தியாலயத்தில் மு. ப. 8. 00 மணிக்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே வேளை அதனோடிணைந்ததாக சகல அரசாங்க பாடசாலைகளிலும் அரச உதவி பெறும் / பெறாத தனியார் பாடசாலைகளிலும் முதலாம் தர மாணவர்களுக்காக முறைப்படியான வகுப்பு ஆரம்பித்தல் 2018 ஜனவரி 18ம் திகி இடம் பெறுகின்றது என்று சகல மாகாண கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகா கல்விப் பணிப்பாளர்களுக்கி அறிவிக்கப்படுள்ளது.

Read more ...

uni

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை பெற்றுக் கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை ஜனவரி 30 ம் திகதி வரை நீடிப்பதற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பணிப்புரை.

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை பெற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை ஜனவரி 30 ம் திகதிவரை நீடிப்பதற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பணப்புரை விடுத்துளார்.

ஆண்டு தோறும் பாடசாலை மாணவருக்கு இலவசமாக சீருடை வவுச்சர்கள் வழங்குதல் அரசாங்கத்தால் தொடர்ந்து நடாத்தப்படும்.

அதற்கு அமைய கடந்த ஆண்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாடசாலை சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் 2017 – 2 - 31 ம் திகவரை செல்லுபடியானதாக இருந்தன.

Read more ...

kel1

ஈ-கற்றல் செயற்பாட்டை வலுப்படுத்துவதற்கு கல்வி அமைச்சுடன் களனிப் பல்கலைக் கழகம் ஒன்றிணைகிறது.

கல்வியில் தரத்தை அடைவதற்குத் துடிப்புடன் செயற்பட பங்களிப்பு செயற்படக் கூடிய நவீன தொழினுட்ப சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கக் கூடிய மிகச் சிறந் ஆசிரியர்களை உருவாக்குவதற்காக டிஜிட்டல் கற்றல் தொழினுட்பத்தைப் பாடசாலை கல்விப் முறைமையில் ஒன்றிணைப்பதில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் விசேட ஈடுபாடு காட்டியுள்ளார்.

இதன் கீழே, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பத்தின் மூலம் பயன்தரும் ஈ-கற்றல் சூழலை பாடசாலையில் உருவாக்கக் கூடிய வண்ணம் டிஜிட்டல் கற்றல் ஆதாரத்தை உருவாக்குதல், அதற்கு ஆசிரியர்களை பயிற்றுவித்தல், ஆக்கபூர்வமான டிஜிட்டல் கல்வி வேலைத் திட்டங்களை தயாரித்தல் உள்ளிட்ட ஈ-கற்றல் விடயங்கள் பலவற்றை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் களனி பல்கலைக் கழகத்தின் உதவியுடன் அதற்கு உரிய வளவாளர்களின் உதவி மற்றும் டிஜிட்டல் வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read more ...

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.