moe.gov.lk

Latest news

sch vacation

2018 ம் ஆண்டின் முதலாவது பாடசாலைத் தவணை முடிவடைதலும் பாடசாலை இரண்டாம் தவணை ஆரம்பித்தலும்.

அரசாங்க மற்றும் அனுமதி பெற்ற சிங்கள பாடசாலைகளுக்கும் தமிழ்ப் பாடசாலைகளுக்கும் பாடசாலை முதலாம் தவணை 2018 ஏப்ரல் மாதம் 06 ம் திகதி வௌ்ளிக்கிழமை முடிவடைகின்றது. இரண்டாம் பாடசாலைத் தவணை 2018 ஏப்ரல் மாதம் 23 ம் திகதி திங்கள்கிழமை ஆரம்பமாகின்றது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கு முதலாவது பாடசாலைத் தவணை 2018 ஏப்ரல் மாதம் 11 ம் திகதி புதன்கிழமை முடிவடைகின்றது. இரண்டாம் பாடசாலைத் தவணை 2018 ஏப்ரல் மாதம் 18 ம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகின்றது.

wije

மேலதிக செயலாளர் (கொள்கைத் திட்டமிடல் மற்றும் செயற்திறன் மீளாய்வூ) எஸ்.யூ+.விஜயரத்ன அவர்களின் ஓய்வூ பெறுகை

இலங்கையின் பொதுக் கல்விக்காகவூம்இ பாடசாலைகளில் கல்வி பயிலும் நாற்பது இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் இரண்டு இலட்சத்து முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும்இ இலங்கை அதிபர் சேவைஇ இலங்கை கல்வி நிர்வாக சேவை உட்பட முழுமையான கல்வி முறைமைக்காகக் கடந்த 35 வருட காலத்திற்கும் மேலாக அளவூ கடந்த அன்புடன் பரந்த அனுபவஞானமும் மறு;றும் அர்ப்பணிப்புடனும் உயர்வான சேவையை ஆற்றிய எஸ்.யூ+.விஜயரத்ன அவர்கள் கல்வி அமைச்சின் கொள்கைத் திட்டமிடல் மற்றும் செயற்திறன் மீளாய்வூப் பிரிவின் மேலதிக செயலாளராக அளப்பரிய சேவையாற்றி 2018. மார்ச்; மாதம் 16ம் திகதி உத்தியோக பூர்வமாக தமது அரச சேவையிலிருந்து ஓய்வூ பெறவூள்ளார். நாம் அனைவரும் அவரை வாழ்த்துகிறௌம்.

grd1

“ எதிர்கால தொழில் வாய்ப்பு மற்றும் பன்னாட்டு அனுபவத்தைப் பெற்று அக்கறை கொண்டவராக நாட்டின் கல்வி முறைமையில் தேவையான மாற்றங்களைச் செய்வோம்”

முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்க்கும் தேசிய விழாவில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் உரை.

2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேரும் பிள்ளைகள் தமது 13 ஆண்டுகால பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து, 2030 ம் ஆண்டில் பாடசாலையை விட்டு நீங்கும் போது அவர்களுக்காக மேலெழும் உயர் கல்வி வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பு இன்றுள்ளதைவிட மிக அதிகமாக வேறுபட்டிருக்கும் என்றும், அந்த நிலைமைப் பற்றி விசேட கவனத்தைச் செலுத்தி, ஆய்வுப் பரிசோதனை செய்து பார்ப்பதுடன் நாட்டின் கல்வி முறைமையில் தேவையான அனைத்து மாற்றங்களையும் செய்வோம் என்றும் க்கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

Read more ...

minister speak

வெற்றிகரமான சுதந்திரத்தில் உண்மையான உரிமையாளராவோம்.

இற்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்னர், 133 ஆண்டு கால ஏகாதிபத்திய ஆட்சியின் முடிவில், நமது நாடு சுதந்திர நாடாக ஆகும் நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. நாட்டை நேசித்து, நாட்டின் சுதந்திரத்துக்காக துணிச்சலுடன் முன்நின்று, இறுதியில் நாட்டுக்காக உயிர் நீத்த சகல மக்கட் சமூகங்களையும் சேர்ந்த சகல இலங்கையர்களுக்கும் மிக விருப்பமான சுதந்திர தினம் என்பதை நாம் இந்த நேரத்தில் சிறதும் மறக்க முடியாது. முதலாவதாக அவர்கள் அனைவருக்கும் உயர்ந்த மரியாதையைசெய்வோம்.

சுதந்திரம் பெற்ற எழுபது ஆண்டு முழுதும் போல், நான் உதயமாகும் எதிர்காலத்திலும் மேலும் சுதந்திரம் பற்றி பேசவும், உண்மையான மனித சுதந்திரத்துக்கு அர்த்தம் கொடுக்கவும் வேண்டும். சிந்தனை, சொல் போன்று வாழ்க்கையில் சுதந்திரத்துக்கும் மனிதர் போராடுகிறார்கள். உலகத்தை மறந்தவர்களாக சிலர் ஒரு தீவு மனநிலைக்கு ஆட்பட்டு சுதந்திரத்தில் விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்கள்.

Read more ...

th1

வரலாற்றில் முதற் தடவையாக கல்வி அமைச்சில் தை பொங்கல் விழா

வரலாற்றில் முதற் தடவையாக கல்வி அமைச்சில் தை பொங்கல் விழா இன்று (16) மிகவும் விமர்சையாக கொண்டாடபட்டது. இதற்கு முன்னர் கல்வி அமைச்சில் பொங்கல் விழாக்கள் கொண்டாடியது இல்லை. கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் தூர நோக்கு சிந்தனையில் கல்வி அமைச்சிலும் நாட்டிலும் பாடசாலை மாணவர்களிடமும் இன ஐக்கியத்தையும் சகவாழ்வையும் உறுதிபடுத்தும் முகமாக இந்த தை பொங்கல் நிகழ்வு கல்வி அமைச்சில் கொண்டாடபட்டது.

இந் நிகழ்விற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களினதும் கல்வி அமைச்சின் செயலாளர்களினதும் அதிகாரிகளினதும் உத்தியோகஸ்தர்களினதும் பூரண ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. நிகழ்வில் பொங்கல் பொங்கல் பூஜைகள் நடைபெற்றதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.அங்கு இடம்பெற்ற நிகழ்வுகளை படங்களில் காணலாம்.

th3

 

th4

th6New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.