moe.gov.lk

Latest news

shoo vovcher 3

எதிர்காலத்தில் மிகப் பாதுகாப்பாக காலை வைப்பதற்கு பிள்ளைகளுக்கு ஊக்கம் தருவதற்காக வசதிகுறைந்த பாடசாலைப் பிள்ளைகளுக்கு பாதணிப் பரிசு அட்டை.

பிள்ளைகளின்  இலவசக் கல்வி உரிமையை மேலும் உறுதிப்படுத்தி, பொருளாதார வசதி குறைந்தவர்களாக அடையாளம் காணப்பட்ட பாடசாலைப் பிள்ளைகளுக்கு 2018 ம் ஆண்டில் பாதணி பரிசு அட்டை வழங்கும் உத்தியோக பூர்வ வேலைத் திட்டம் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் தலைமையில் 11 ம் திகதி கல்வி அமைச்சில் இடம் பெற்றது. 

நாட்டின் பெறுமதி மிக்க செல்வம் பிள்ளைகள் என்றும், பிள்ளைகளின் எதிர்காலத்தை கல்வியினால் வலுப்படுத்துவதன் பொருட்டு கல்வித் துறைக்கான அமைச்சர் என்ற வகையில் எப்போதும் தயாராக இருப்பதாகவும், அதன் இன்னுமொரு பெறுமதி மிக்க நடவடிக்கையாக அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று, 2018 ம் ஆண்டு தொடக்கம் அடையாளம் காணப்பட்ட பாடசாலை  பிள்ளைகளுக்கு பாதணிப் பரிசு அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். 

இலங்கையில் கஷ்ட, மிகக் கஷ்ட பிரதேசங்களில் அமைந்துள்ள கற்கும் பிள்ளைகளுக்கு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் செயற்பாட்டுக்கு வந்துள்ள இந்த வேலைத் திட்டத்தின் கீழ், அடையாளம் காணப்பட்ட தேவைகளுடனான 4469 பாடசாலைகளின் 647200 பிள்ளைகளுக்கு 2018 ம் ஆண்டில் பாதணிப் பரிசு அட்டை வழங்கப்படுகின்றது. இதற்கு கல்வி அமைச்சு ஒதுக்கியுள்ள நிதி ரூபா 853 மில்லியன் ஆகும்.

 

1.    எதிர்காலத்தில் மிகப் பாதுகாப்பாக காலை வைப்பதற்கு பிள்ளைகளுக்கு ஊக்கம் தருவதற்காக வசதிகுறைந்த பாடசாலைப் பிள்ளைகளுக்கு பாதணிப் பரிசு அட்டை.

 

பிள்ளைகளின்  இலவசக் கல்வி உரிமையை மேலும் உறுதிப்படுத்தி, பொருளாதார வசதி குறைந்தவர்களாக அடையாளம் காணப்பட்ட பாடசாலைப் பிள்ளைகளுக்கு 2018 ம் ஆண்டில் பாதணி பரிசு அட்டை வழங்கும் உத்தியோக பூர்வ வேலைத் திட்டம் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் தலைமையில் 11 ம் திகதி கல்வி அமைச்சில் இடம் பெற்றது.

 

நாட்டின் பெறுமதி மிக்க செல்வம் பிள்ளைகள் என்றும், பிள்ளைகளின் எதிர்காலத்தை கல்வியினால் வலுப்படுத்துவதன் பொருட்டு கல்வித் துறைக்கான அமைச்சர் என்ற வகையில் எப்போதும் தயாராக இருப்பதாகவும், அதன் இன்னுமொரு பெறுமதி மிக்க நடவடிக்கையாக அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று, 2018 ம் ஆண்டு தொடக்கம் அடையாளம் காணப்பட்ட பாடசாலை  பிள்ளைகளுக்கு பாதணிப் பரிசு அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

 

இலங்கையில் கஷ்ட, மிகக் கஷ்ட பிரதேசங்களில் அமைந்துள்ள கற்கும் பிள்ளைகளுக்கு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் செயற்பாட்டுக்கு வந்துள்ள இந்த வேலைத் திட்டத்தின் கீழ், அடையாளம் காணப்பட்ட தேவைகளுடனான 4469 பாடசாலைகளின் 647200 பிள்ளைகளுக்கு 2018 ம் ஆண்டில் பாதணிப் பரிசு அட்டை வழங்கப்படுகின்றது. இதற்கு கல்வி அமைச்சு ஒதுக்கியுள்ள நிதி ரூபா 853 மில்லியன் ஆகும்.

vac

2017 ம் ஆண்டு பாடசாலை மூன்றாந் தவணை முடிவுறுதலும் 2018 ம் ஆண்டின் பாடசாலை முதலாந் தவணை தொடங்குதலும்.

2017 ம் ஆண்டின் அரசாங்க மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாந் தவணை 2017 – 12 – 08 ம் திகதி வெள்ளிக்கிழமை முடிவுறுகின்றது. 2018 ம் ஆண்டின் பாடசாலை முதலாந் தவணை 2018 – 01 – 02 ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது.
க. பொ. த. (சா.த.) பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் மையங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.

tt devi

இடமாற்றத்துக்கு எதிராக மாணவர்களைத் தூண்டிவிடும் ஆசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – கல்வி அமைச்சர் கூறுகிறார்.

சிலருக்காகவன்றி பொது நல்லைனை முன்னிட்டு சழரிய தீர்மானத்தை எடுப்பது எனது பொறுப்பு என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்கள் கூறினார்கள். எல்லோரையும் ஆறுதல்படுத்துவதற்காக ஐஸ்கிறீம் வாங்கிக்கொடுப்பது கல்விக் கொள்கை அல்ல என்று குறிப்பிட்ட அமைச்சர் கல்வித் துறையின் மேன்மையின் பொருட்டு அச்சமின்றி முடிவெடுப்பதற்கு ஆயத்தமாக இருப்பதாகச் சுட்டிக் காட்டினார்.

கொழும்பு தேலி பாலிகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிய சிறுவர் சித்திரப் போட்டியில் பெற்ற பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு கல்வி அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட தேசிய பாடசாலைகள் ஆசிரிய இடமாற்ற பற்றிய வேலைத் திட்டம் தொடர்பில் அமைச்சர் விளக்கமளித்தார்.

Read more ...

Logo-t

"சுரக்‌ஷா தேசிய மாணவர் காப்புறுதித் தினம் டிசெம்பர்-07-2017" நாடு தழுவிய பாடசாலை சார் சமூகத்தினை விழிப்புணர்வூட்டும் விசேட நிகழ்ச்சித் திட்டம்.

‘தாய் நாட்டுப் பிள்ளைகளை எப்போதும் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் தேசிய மட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சுரக்‌ஷா மாணவர் காப்புறுதி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திசம்பர் 07 ம் திகதி தேசிய சுரக்‌ஷா மாணவர் காப்புறுதி நாள் என்று பெயரிடப்பட்டுள்ளது. சுரக்‌ஷா மாணவர் காப்புறுதியானது, பிள்ளைகளை உடல் மற்றும் உள நலமுள்ளவர்களாக பாதுகாப்பதற்கும், அதன் ஊடாக தாய் நாட்டின் பிள்ளைகளுக்கு மிகவும் நல்ல எதிர்காலத்தை வழங்குவதற்கும் நல்ல வலுவைக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும். இந்த வேலைத் திட்டம் மற்றும் அதன் பயனை அடையக் கூடிய விதம் தொடர்பில் பிள்ளைகள் மற்றும் பெற்றோர் உட்பட பாடசாலை சமூகத்தினருக்கு விளக்கும் தேவை மேலும் எழுந்திருப்பதால் அதன் பொருட்டு திசம்பர் 07 ம் திகதி சுரக்‌ஷா மாணவர் காப்புறுதி தொடர்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை அடிப்படையிலான சமூகத்துக்கு விளக்கும் பொருட்டு தீவு தழுவிய இந்த விசேட வேலைத் திட்டத் நடத்துவதற்கு கல்வி அமைச்சு உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

Read more ...

scho

விசேட திறமை கொண்ட பிள்ளைகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பான புலமைப் பரிசில் வேலைத் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளல் செப்டம்பர் 06 ம் திகதி முடிவடைகிறது.

கௌரவ கல்வி அமைச்சரின் தீர்மானத்துக்கு அமைய விளையாட்டு, கலை மற்றும் ஆக்கத் துறைகளில் விசேட திறமை காட்டும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் ஜூலை மாதம் 31 ம் திகதி ஆரம்பமாகியது. விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளல் செப்டம்பர் 06 ம் திகதி முடிவடைகிறது.

ளும் ஊடாக விளையாட்டு, அழகில் செயற்பாடுகள் மற்றும் புதிய ஆக்கங்களுக்கு 3 விசேட பிரிவுகளின் கீழ் புலமைப் பரிசில் வழங்கப்படும்.
இது தொடர்பான உரிய விண்ணப்ப படிவம் மற்றும் மேலதிக விபரங்களை www.moe.gov.lk என்ற கல்வி அமைச்சின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.