moe.gov.lk

Latest news

cri1 1

”பாடசாலை மட்டத்தில் கிறிக்கற் விளையாட்டை அபிவிருத்தி செய்வதன் மூலம் உண்ணாட்டு மற்றும் பன்னாட்டு மட்டத்தில் வலிமை மிக்க எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்” – கல்வி அமைச்சர அகில விராஜ் காரிய வசம் அவர்கள்.

பாடசாலைக் கிறிக்கற் மூன்றாண்டு தேசிய திட்டம் கல்வி அமைச்சரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் கிறிக்கற் விளையாட்டை முன்னேற்றி, இந்த நாட்டின் கிறிக்கற் விளையாட்டுக்கு உண்ணாட்டு மற்றும் பன்னாட்டு மட்டத்தில் வலிமைமிக்க எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று கல்வி அமைச்சபர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் கூறினார்கள். இன்று கொழும்பு பண்டாரநாயக்கா நினைவு மாநாட்டு மண்டபத்தில் கல்வி அமைச்சரின் தலைமையில் இலங்கை கிறிக்கற் விற்பன்னர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற பாடசாலைக் கிறிக்கற்றை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்ட மூன்றாண்டுத் தேசிய திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சியிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Read more ...

jan1st

உதயமாகியிருக்கும் புத்தாண்டை புதிய சிந்தனை ஆண்டாக ஆக்குவோம் – கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்.

“கல்வி புலத்தைச் சேர்ந்த நிறுவனங்களில் கடமைப் பட்டியல்கில் காணப்படக்கூடிய பிரச்சினைகளை நேரத்தோடு அடையாளம் கண்டு அவற்றுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு கவனம் செலுத்துங்கள்” – புதிய ஆண்டில் அலுவலர்களுக்கு கல்வு அமைச்சரின் அறிவுரை.

நாட்டில் பெரும்பாலோனோருக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கல்வி அமைச்சுப் புலத்திற்கு உரித்தான சகல நிறுவனங்களின் நடைமுறைகளில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை, நேர காலத்தோடே அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று புத்தாண்டில கல்வி அமைச்சில் பணியை ஆரம்பிக்கும் போது அமைச்சர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.

Read more ...

cab copy

‘ தேசிய கல்விக் கல்லூரிகளில் பாடத் திட்டத்தை நவீனப்படுத்தல் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது ’ – கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம்.

நிர்வாக கடமைகளை வலுப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு 20 கெப் ரக வாகனங்கள். தேசிய கல்விக் கல்லூரிகளில் பாடத் திட்டங்களை நவீனப்படுத்தல் தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்துகின்றது என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் கூறினார். இன்று (13) காலை கல்வி அமைச்சு வளவில் இடம் பெற்ற 20 தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு கெப் ரக வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் கல்விக் கல்லூரிகளில் காலங் கடந்த பாடத் திட்டங்களை நவீனப்படுத்தி நவீன உலகத்துக்கு ஏற்றவாறு கற்கை முறையினை தயாரிக்க வேண்டும். கல்விக் கல்லூரிகளில் நிர்வாகக் கடமைகளுக்கு போக்கு வரத்து வசதிகள் கடும் தேவை நிலவுகின்றது என்றும் அந்த தேவையை பரிசீலித்தும் கல்விக் கல்லூரிகளில் நிர்வாகக் கடமைகளை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் இவ்வாறு வாகனங்கள் வழங்க முடிந்தமைக்குத் தான் மகிழ்ச்சியடைவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

Read more ...

appeal

Appeal Application for Grade 5 Scholarship Examination

அறிவித்தல் ǃ

2018 - 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான மேன்முறையீடு செய்வோர் இதன் கீழுள்ள பத்திரத்தைப் பதிவிறக்கம் செய்து கீழ்க் காணும் முகவரிக்கு பதிவூத் தபாலில் அனுப்பி வைக்குமாறு அறியத்தருகின்றேன்.

மின்னஞ்சல் முகவரி :- றறற.அழந.பழஎ.டம

தபால் முகவரி :- கல்விப் பணிப்பாளர்இ
பாடசாலைகள் செயற்பாட்டுப் பிரிவூஇ
“இசுருபாய”இ பத்தரமுல்ல.

- You can Download the Application From Here

3 d

முப்பரிமாண அச்சுத் தொழினுட்பத்தை பாடசாலை மட்டத்தில் பிரபலப்படுத்த நடவடிக்கை.

வேகமாக மாறிவரும் உலகத்தோடு முன்னேறிச் சென்று தொழினுட்ப சவாலை வெற்றி கொள்ளக் கூடிய பாடசாலை சமூகத்தை இந்த நாட்டில் பாடசாலை முறைமையில் கட்டியெழுப்புவதற்கு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பல விசேட வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படுகின்றன.

அதன்படி, உலகத்தில் வேகமாக வளர்ச்சியடைந்த முப்பரிமாண அச்சிடல் தொழினுட்பத்தை இந்நத நாட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தல், கல்வியின் பொருட்டு பயன்படுத்தல், உலக முப்பரிமாண அச்சிடல் தொழினுட்ப தினத்தை கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டு கல்வி அமைச்சு, மொபிட்டெல் நிறுவனம் மற்றும் RCS 2 (Research Creative Services and Sales) உடன் இணைந்து சில நாட்களுக்கு முன் விசேட முப்பரிமாண அச்சிடல் பாசறை நடாத்தப்பட்டது.

Read more ...

More Articles ...

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.