moe.gov.lk

Latest news

dance

கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலை நாட்டியப் போட்டி – 2017

ஜூலை மாதம் 29 மற்றும் 30 ம் திகதிகளில் கம்பகா கல்வி வலயத்தில் அமைந்துள்ள 13 பாடசாலைகளை மையமாகக் கொண்டு நடைபெறவிருக்கின்றன.

ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையுள்ள மாணவர்கள் உள்ள பாடசாலைகளுக்காக ஜூலை 29 ம் திகதி போட்டிகள் நடாத்தப்படும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையுள்ள மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்காக ஜூலை 30 ம் திகதி போட்டிகள் நடாத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்முறை அகில இலங்கை பாடசாலை நாட்டியப் போட்டியில் கலந்து கொள்ள தீவு முழுதுமுள்ள ஆயிரம் பாடசாலைகளில் இருந்து இருபதாயிரம் வரையிலான மாணவ மாணவிகள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

youth

தகவல் தொழினுட்ப முதன்மைத் திட்டமொன்றைத் தயாரித்தல் வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் ஆலோசனையின் படி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பத்தினை கருத்தில் கொண்டு நிறுவப்பட்டு இருக்கும் யுனெஸ்கோ ஒத்துழைப்பு குழுவின் தலைமையில் நடைபெற்றுவரும் இரண்டாவது செயலமர்வை 2017 ஜீலை மாதம் 17 ம் திகதி முதல் 20 ம் திகதி வரை வௌளவத்தை மிராஜ் ஹோட்டலில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுளன. அதன் ஆரம்ப நிகழ்வு கல்வி அமைச்சின் செயலாளர் திரு சுனில் ஹெட்டியாராச்சி தலைமையில் 17 ம் திகதி முற்பகல் 9. 00 மணிக்கு நடைபெற்றது.

Read more ...

3K1A3156

தொல்பொருள் தலங்களை மேம்படுத்துவதற்காக தொல்பொருளியல் அதிகரிகளுக்கு வெளிநாட்டுப் பயிற்சி பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் - கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்.

தொல்பொருள் துறையில் ஆய்வுக் கற்கை மற்றும் பன்னாட்டு மட்டத்தில் வினைத் திறனைக் கைக்கொள்ளவும் நமது நாட்டில் தொல்பொருளியல் அலுவலர்களுக்கு பயிற்சி வாய்ப்பு வழங்குவது காலத்தின் தேவைப்பாடாகும் என்றும் அதன் பொருட்டு தொல்பொருளியல் திணைக்களத்தின் ஒதுக்கீட்டு நிதி போதாது என்றால் அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்குத் தான் தயார் என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் கூறினார்.

தேசிய தொல்பொருளியல் தினத்தை முன்னிட்டு இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று (07) நடைபெற்ற தொல்பொருளியல் மாகாநாட்டில் கலந்துகொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், நவீன பன்னாட்டு பாதுகாப்பு முறைமை மற்றம் அறிவு என்பன எமது தொல்பொருளியல் துறையை மேலுயர்த்துவதற்கு அவசியமானதாகும் என்று வலியுறுத்தினார்.

Read more ...

prii

“எந்தவித அரசியல் சக்திக்கும் அடிபணியாமல் தொல்பொருள் தலங்களை மேலுயர்த்துவதற்காக பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுகின்றேன்” – கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்.

நமது நாட்டின் பெறுமதி மிக்க தொல்பொருளியல் தலங்கள் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் வரை இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் அந்த பெறுமதிமிக்க தொல்பொருள் நிலையங்கள் மற்றும் தொல்பொருளியல் சார்ந்தவைகளையும் பாதுகாப்பதற்காக எந்தவொரு அரசியல் சக்திக்கும் கீழ்ப்படியாமல், தொல்பொருள் கட்டளைச் சட்டத்துக்கு அமைய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் வகைகூறலுடன் செயல்படுவது தனது விருப்பம் என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் கூறினார்.

தேசிய தொல்பொருளியல் தினத்தை முன்னிட்டு இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று (07) நடைபெற்ற தொல்பொருளியல் மாகாநாட்டில் கலந்துகொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

Read more ...

ru1

பௌத்த சாசனங்கள், இந்த நாட்டின் பௌத்த மரபுரிமைகளை எப்போதும் முழுதும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன் என்று அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்கள் றுவன்வெளி சைத்தியத்தின் முன்னால் உறுதி மொழி எடுத்தார்....

பௌத்த சாசனங்கள், இந்த நாட்டின் பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்கும் போது எந்த தடைகள் வந்தாலும் அவற்றுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் றுவன்வெளி தாதுகோபுரத்தின் முற்றத்தில் கடந்த வாரம் சபதம் எடுத்தார். றுவான்வெளி தாதுகோபுரத்தின் (சைத்தியம்) அதிபர் அதி வண. பல்லேகமை ஹேமரத்ன தேரரின் அநுசாசனத்தின் பேரில் பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனையின் படி மத்திய பண்பாட்டு நிதியத்தின் மூலம் 23 மில்லியன் ரூபா செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட றுவன்வெளி சைத்தியத்தின் மணல் முற்ற மறுசீரப்பு வேலைகள் முடிந்து நடாத்தப்பட்ட பூஜையில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்ட சபதம் எடுத்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் இந்த நாட்டில் பௌத்த தொல்பொருளியல் தலங்கள் அமைந்துள்ள பிரதேசங்களின் எல்லைகளை உறுதிப்படுத்தல் தொடர்பில் விசேட வேலைத் திட்டம் நடைபெறுவதாகவும் கவனத்தில் கொண்டு வந்தார்.

Read more ...

More Articles ...

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.