moe.gov.lk

Latest news

confer

ஒரு மாதத்துக்குள் தேசிய பாடசாலைகளில் சகல ஆசிரியர் வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு நடவடிக்கை.

சகலதேசிய பாடசாலைகளின் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பி பாடசாலைகளில் நிர்வாக செயற்பாடுகள் மற்றும் கல்விச் செயற்பாடுகளை இடையூறு இன்றி கொண்டு நடாத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். இதன் பொருட்டு தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் மற்றும் மேலதிக ஆசிரியர்கள் சம்பந்தமான விபரங்களுக்கு அமைய ஆசிரியர் சமன்படுத்தலை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர், நீண்ட காலமாக ஒரே தேசிய பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களைப் பொருத்தமட்டில் அவர்களுக்கு இட மாற்றும் பெற்றுக் கொடுக்கவும், தேசிய பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு மாகாண அரச சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தகைமையான ஆசியர்களை தேசிய பாடசாலை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கினார். அத்துடன் தரம் பெற்ற ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Read more ...

fb

“தனது தனிப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் கவிதை எழுதியமைக்காக இட மாற்றத்துக்கு ஆளான ஆசிரியர்” தொடர்பாக அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத் தளங்களில் வெளியான தகவல் மற்றும் கல்வித் தொழிற் சங்கங்களில் வெளியானவை சம்பந்தமானது.

இந்த ஊடக அறிக்கைகள் தனித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட அறிக்கைகள் என்று முதலில் தெரிவிக்கின்றோம்.

குறித்த செய்தி அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி எந்த விதத்திலும் கல்வி அமைச்சினால் குளியாப்பிட்டி மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் ஒருவர் ஃபேஸ்புக் பக்கத்தில் கவிதை எழுதுவது சம்பந்தமாக மாத்திரம் விசாரணை நடைபெறவில்லை என்று பொறுப்புணர்ச்சியுடன் குறிப்பிடுகின்றோம்.

Read more ...

prashantha

பேராசிரியர் பிரசாந்த பந்துல மண்டாவெல அவர்கள் தொல்பொருளியல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக கடமையைப் போறுப்பேற்றார்.

இலங்கை தொல்பொருளியல் திணைக்களத்தின் பதில் கடமையாற்றும் பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் பிரசாந்த பந்துல மண்டாவெல அவர்கள் கடந்த 06 ம் திகதி கடமையைப் பொறுப்பேற்றார். அவர் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார். அத்துடன் மொறட்டுவை பல்கலைக் கழகம், இங்கிலாந்தின் யோர்க் பல்கலைக் கழகம் போன்ற உண்ணாட்டு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் மேலும் கல்வி பெற்றுள்ளார்.

1981 அளவில் தொல்பொருளியல் துறையில் பணிக்குச் சேர்ந்த அவர் தொல்பொருளியல் துறையில் பல பிவிவுகளில் பல பதவிகளை வகித்த அலுவலராவார். பேராசிரியர் பீ. பீ. மண்டலவெல அவர்ள் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தில் வரலாறு மற்றும் தொல்பொருளியல் கற்கைத் துறையில் பிரிவுத் தலைவராக கடமையாற்றியுள்ளார்.

repack

அனர்த்த நிலைமை காரணமாக பாதிப்புக்கு உள்ளான பாடசாலை மாணவர்களுக்கான சீருடை, பாடநூல்கள் உள்ளடங்கிய பொதிகளை பங்கிட்டளிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் தயார்.

அனர்த்த நிலை மை காரணமாக பாதிப்புக்கு உள்ளான பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் நிலைப்படுத்துவதற்க விசேட நிவாரண பொதிகளை வழங்குவதறகனு தேவையான நடவடிக்கை முறைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கடந்த வாரம் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அதற்கு அமைய, ஒரு மாணவனுக்கு ரூபா 10,000/= பெறுமதியான பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி என்ற அடிப்படையில் பாதிப்புக்கு உள்ளான சகல மாணவருக்கும் வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய பாடசாலைகள் மற்றும் பிரதான செயற்றிட்ட நிறுவனமான கல்வி அமைச்சு இந்த வேலைத் திட்டத்தில் ஒன்றிணைந்தன. அதற்கு அமைய கடந்த புதன் கிழமை முதல் கல்வி அமைச்சுக்கு நாடு பூராவிலும் உள்ள தேசிய பாடசாலைகள் பல பாடசாலை மட்டத்தில் ஒன்றிணைந்து பொருள் உதவிகளை கொண்டு வந்து கொடுத்தன. இந்த நிவாரண உதவி முறைப்படி வகைப்படுத்தப்பட்டு, உரிய முறையில் பகிர்ந்தளிக்கும் பொருட்டு மேற்கொண்ட ஏற்பாடுகளின் இறுதிக் கட்டம் முடிவுற்று தற்போது செயற்படுத்தப்படுகின்றது.

Read more ...

1

கல்வி அமைச்சர் பாகியன்கல் சுற்றுலா, மண்சரிவு எச்சரிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார்.

மண்சரிவு எச்சரிக்கை விடப்பட்டுள்ள புராதன பாகியன்கல் குகைகள் சம்பந்தமாக பன்முக விரிவான அறிக்கையை சமர்பிக்குமாறு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். கடந்த 04 ம் திகதி பாகியன்கல் குகைகளின் தற்போதைய நிலையைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக அந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட துறை நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தகவல்களை ஆராய்ந்து பார்த்த போது அமைச்சர் இந்த அறிவுறுத்தலை அதிகாரிகளுக்கு வழங்கினார். அதற்கு அமைய தொல்பொருளியல், பொறியியல், வாஸ்துவியல், புவி அமைப்பியல் உட்பட பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை இணைத்துக் கொண்டு உரிய அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more ...

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.