புதிய கண்டுபிடிப்புகளுக்காக பாடசாலை பிள்ளைகள் முன்வருவது நாட்டின் சுமுகமான எதிர்காலத்திற்கு மாபெரும் நம்பிக்கை என கல்விஇ இளைஞர் விவகார மற்றும் விiளாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அலஹப்பெரும கூறுகின்றார். நேற்று (12) ஆம் திகதி கல்வி அமைச்சு வளாகத்தில் அமைச்சரை சந்தித்த புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்நத இரண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் நிகழ்வின் போது அமைச்சர் அவ்வாறு கூறினார்
இரத்தத்தைப் பெறாமல் இரத்த சர்க்கரை அளவைக் கண்டறியூம் சாதனம ஒன்றை நாட்டிற்கு அறிமுகப்படுத்திய வவூனியா சைவபிரகாச மகளிர் கல்லூரி ரோஹிதா புஷ்பதேவன் மாணவிக்கும் மற்றும் ஹெலிகாப்ட்டர் இயந்திரத்தின் மாதிரி ஒன்றை வடிவமைத்த குருவிட்ட மத்திய கல்லூரி தொழில்நுட்ப பிரிவின் ஏ.எல். தருஷிக்க திலந்த மாணவருக்கும் அவர்களின் இயலுமையை பாராட்டி வாழ்த்துக்களை ஒன்றுசேர்த்த அமைச்சர் அவர்கள் அவர்களின் எதிர்கால வெற்றிக்கு ஆசீர்வாதம் வழங்கினார்
அத்துடன் கடந்த யூத்த சமயத்pல் தந்தையை இழந்து பாரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளான தமது மகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் முகமாக அவரின் இந்த புதிய கண்டுபிடிப்பிற்கான இயலுமையை ஊக்குவிப்பதற்கும் அவரின் தாயார் மற்றும் பொருளாதார கஷ்டங்களுடன் தமது பிள்ளையின் எதிர்கால பயணத்திற்கு வலு சேர்க்கும் ஹெலிகாப்ட்டர் இயந்திரத்தின் மாதிரி ஒன்றை வடிவமைத்த தருஷிக்க திலந்தவின் தந்தைக்கும் அவர்களின் தகைமையை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் கல்வி அமைச்சின் கீழ் தொழில் வாய்ப்புகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தும்படி அமைச்சர் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்