நாட்டுக்கு பெறுமதியான நூல்

அன்பார்ந்த சிறுவர்களே,

தற்காலத்தில் உலகம் பூராகவும் பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் காரணமாக இந்நாட்டின் 43 இலட்சம் அளவிலான பாடசாலை மாணவர்கள் வீட்டிற்குள் கால நேரத்தை வீணடித்து வருகின்றனர். இந்த சிறுவர்களிடத்தில் சிந்தனை பலத்தையும் ஆக்கங்களை நிர்மாணிப்பதற்கான பலத்தையும் சவால்களை வெற்றிக்கொள்வதற்கான பலத்தையும் விருத்தி செய்யும் நோக்குடன் கல்வி அமைச்சு மற்றும் இலங்கை தேசிய நூலகம் ஆகியன இணைந்து முன்னெடுக்கும் 10,000 நூல்கள் எழுதும் நாடுதழுவிய ரீதியிலான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
;
வீட்டிற்குள் அடங்கி கிடக்கும் மாணவர்கள் புத்தகங்களை வாசித்து தமது அறிவினை வளர்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நூல்களை வாசிக்கும் மாணவர்களுக்கு இன்னுமொரு செயற்திறன்மிக்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுகின்றோம். அது வேறொன்றுக்கும் அல்ல. நூல் எழுதுவதற்காகும். இந்த அசாதாரண நிலைமையின் போது உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கு களம் காண்போம். எழுதுவதற்கு ஆரம்பிப்போம். நீங்கள் எழுதிய புத்தகத்தை பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஆசிரியர்களிடம் காண்பித்து திருத்தங்கள் செய்து அதிபர் ஊடாக வலய கல்வி பணிப்பாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  எழுதி அனுப்பி வைக்கப்பட்ட நூல்களில் சிறந்த நூல்களை வலய பணிப்பாளர் மாகாண கல்வி பணிப்பாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதனை தொடர்ந்து மாகாண கல்வி பணிப்பாளர் சிறந்த நூற்களை கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைப்பார். இதன்பிரகாரம் சிறந்த பத்தாயிரம் நூல்களை கல்வி அமைச்சு பிரசுரித்து வெளியிடும். நாடளாவிய ரீதியிலுளள அனைத்து பாடசாலைகளில் இருந்தும் ஒரு புத்தகமாவது எழுதி முன்வைக்கப்படும் என கல்வி எதிர்பார்த்துள்ளது. இதன்ஊடாக சிறுவர் எழுத்தாளராகவும் நூலாசிரியராக ஆக முடியும். அத்துடன் சிறந்த நூல்களை எழுதியோருக்கு அரச விருதும் கிடைக்கும்.

நீங்கள் 1 வகுப்பு முதல் 13 வகுப்பு வரை அரச,தனியார்,சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவராயின் கொவிட் 19 நிலைமையின் காரணமாக வழங்கப்பட்ட விடுமுறை காலத்தில் இந்த போட்டிக்காக நூலொன்றை எழுத முடியும். இதற்கான விதிமுறைகள்; கீழ்வருமாறு,

விதிமுறைகள்:

1. வயது பிரிவு: 1 வகுப்பு முதல் 13 வகுப்பு வரையானோருக்கு எழுத முடியும்.

2. சிங்களம்,தமிழ்,ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் எழுத முடியும்.

3. நூல் வகைகள்: சிறுவர் கதைகள், கவிதை செய்யுள், இளைஞர் இலக்கிய நூல்கள், சிறுகதை, நாவல், நாடக கதை, வரலாற்று கதை, கற்பனை கதை, இரகசிய கதை, மந்திர கதை, பொதுமக்கள் கதை, சுற்றாடல் சார் நோக்கு, நகைச்சுவை கதை, மதசார்பு கதைகள்,வீர கதைகள்,கலப்பு என வகைகளில் இருந்து ஒன்றை தெரிவு செய்து எழுத முடியும்.

5. சிறுகதை தொகுப்பு எனில், குறைந்த பட்சம் 5 சிறுகதைகள் உள்ளடக்கப்பட வேண்டும்.

6. கவிதை தொகுப்பு எனில், 20 கவிதைகளுக்கு அதிகமாகவும் 50 கவிதைக்கு உட்பட்டதாகவும் இருத்தல் வேண்டும்.

7. நாவல் எனில் கணிணி மயப்படுத்தப்பட்ட பின்னர் யு5 தாள் வகையில் 120 பக்கங்களை கொண்டதாக இருக்க வேண்டும்.

8. சிறுவர் கதை புத்தகத்தில் 16 பக்கங்களாவது இருக்க வேண்டும். ஏனைய புத்தகங்களில் பக்கங்கள் 49 அதிகமாகவும் 150 க்கு உட்பட்டதாகவும் இருத்தல் வேண்டும்.

9. பத்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள் சிறுவர் கதைகள் எழுத முடியும். இந்த சிறுவர் கதை நூல் வர்ணங்கள் கொண்டதாகவும் சித்திரங்கள் உள்ளடக்கியதாக இருக்க முடியும்.

10. அனைத்து நூல்களும் ஏ4 கடதாசியில் எழுத வேண்டும்.

11. அனைத்து புத்தகங்களும் கணிணிமயப்படுத்தி இருக்க வேண்டும்.

12.அனைத்து நூல்களும் மென்மையான பிரதி மற்றும் கடினமான  பிரதிகளை கொண்டதாக இருக்க வேண்டும்.

13. புகைப்படங்கள் இருப்பின் கறுப்பு வெள்ளை வர்ணமுடையதாக இருத்தல் வேண்டும். வர்ண புகைப்படமாக இருந்தால் 4 உழடழரசள  . முக்கியமாக எவரும் இனங்காண முடியாத வண்ணம் முகப்பகுதியை காட்சிப்படுத்தல்.

14. கதையில் வரும் பெயர், கிராமத்தின் பெயர்கள் கற்பனையாக இருக்க வேண்டும். அதற்கு மாறாக அவை உண்மையானதாக இருக்க கூடாது.

15. சிறுவர் கதை எனில், கணிணி எழுத்தின் அளவு 14 ஆக இருத்தல் வேண்டும். ஏனைய புத்தகங்களில் எழுத்து அளவு 12 ஆக இருக்க வேண்டும்.வரிகளுக்கு இடையில் இடைவெளி 1.5 ஆக இருத்தல்.

16. தலைப்பு மற்றும் கதை ஆரம்ப வரிகளுக்கு இடையிலான இடைவெளி கணிணி அட்டவணையின் பிரகாரம் 2 ஆக இருத்தல் வேண்டும்.

17. எழுதும் பக்கத்தில் சுற்று இடைவெளி அளவு பின்வருமாறு இருத்த வேண்டும். இடது பக்கம் 1.5 இடைவெளியும் ஏனைய மூன்று பகுதிகளிலும் 1 அடி அளவு இடைவெளி இருத்தல்
18. எழுத்து வகை டியஅini ஆக இருத்தல்.

19. முக அட்டையை வர்ண புகைப்படங்கள் அல்லது சித்திரங்களினால் அலங்கரிக்க முடியும்.

20. கவிதை புத்தகங்களில் சித்திரங்களை உள்ளடக்கவும் முடியும்.உள்ளடக்காமல் இருக்கவும் முடியும்.. எனினும் அவை கணிணி phடip யசவ ஆக இருக்க கூடாது.

21 கடின பிரதியாயின் றசைந டிiனெiபெ ஊடாக இணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும ;மென்மையான பிரதியாயின்  (ஊனு)  ஊடாக முன்வைக்க வேண்;டும். மாகாண அலுவலகத்தின் ஊடாக தேர்ந்தெடுக்கப்படும் நூல்களின்  கீழ் வரும் மின்னஞ்சல் முகவரிக்கு pனக செய்து அனுப்ப வேண்டும்.

22. பாடசாலைகளின் ஊடாக அனுப்பி வைக்கப்படும் அனைத்து பிரதிகளையும்;    வலய அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்ப வேண்டும்.

23. வேறு நபர் ஒருவர் பிரசுரித்த கருத்துகளை அனுமதியின்றி உங்களது நூலில் உள்வாங்க கூடாது. மேலும் வேறு ஒருவரின் ஆக்கங்களையும் முன்வைக்க கூடாது.

24. 11 முதல் 13 வகுப்பு வரையான பிரிவினருக்காக விடயதானத்துடன் இணைந்த நூல், செயற்றிட்டங்கள், பரிசோதனைகள் ஆகியன முன்வைக்க முடியும்.

25. அவ்வாறான நூல்;கள் முன்வைக்கப்படும் போது கடைப்பிடிக்க வேண்டியவைகள் தொடர்பாக 26 முதல் 29 வரையான விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

26. பாட விடயதானத்துடன் தொடர்புடைய நூல்களுக்காக விளக்கம் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் புகைப்படங்கள் மற்றும் சித்திரங்களை உட்சேர்க்க முடியும்.

27 .இந்த பிரிவில் புத்தகங்களுக்கிடையில் செயற்திட்டங்கள் மற்றும் பரிசோதனைகள் முன்வைப்பதாயின் முக்கிய ஒழுக்க விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

28. சுட்டிக்காட்டல் குறிப்புகள் இட வேண்டும்.உசாத்துணை நூல் பெயர்களை இணைக்க வேண்டும்.

30. புத்தகங்களின் பக்கங்களை ஒழுங்குப்படுத்தும் போது பின்வரும் விடயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

1. நூல் முக அட்டை; ( முன் பக்க சித்திரங்களுடன் தலைப்பு மற்றும் எழுதுனரின் பெயர் இருத்தல் வேண்டும்)
2. இரண்டாம் முக அட்டை  (நூலின் பெயர், எழுதுனரின் பெயர், வெளியிட்டாளரின் பெயர்களுடன்)
3 சமர்ப்பனம்- உங்களுக்கு விருப்பமானவருக்கு இந்நூலை சமர்ப்பனம் செய்ய முடியும். ' நான் இந்த நூலை...... அவர்களுக்கு அன்புடன் சமர்ப்பனம் செய்கின்றேன் என்ற வாக்கியத்தை இட முடியும்.
4. நன்றி - இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு உங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க முடியும்( ஒரு ஏ4 பக்கத்திற்கு மட்டுப்பட்டதாக இருக்க வேண்டும்.)
5. முன்னுரை- புத்தகம் மற்றும் எழுத்தாளர் தொடர்பாக எழுதுவது.(ஏ4 தாளின் இரு பக்கங்களுக்கு மேல் செல்லாமல் மட்டுப்படுத்துங்கள்.)
6.உள்ளடக்கம் - பிரதான தலைப்பு, உப தலைப்பு,பக்க எண்களை கொண்ட அமைய வேண்டும்( இது சிறுவர் கதை நூல்களுக்கு தேவையில்லை.)

மேற்குறிப்பிட்டவை வரைக்கும் பக்க இலக்கங்களை உரோம இலக்கத்தில் இட வேண்டும்.
7. அத்தியாயம் - முறையான ஒழுங்குப்படுத்தலுக்கு உட்பட்டதாகவும் வேறுவேறாக பிரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

பொது விதிகள்

⦁ மே மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் நூல் ஆக்கம் நிறைவு செய்ய வேண்டும்.
⦁ பாடசாலை குழுவொன்றின் ஊடாக சிறந்த நூலை தேர்ந்தெடுத்து வலய கல்வி பணிப்பாளருக்கு ஜுன் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்க வேண்டும்.
⦁ வலய கல்வி அலுவலகத்தின் ஊடாக ஜுன் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து நூல்களையும் மாகாண கல்வி திணைக்களத்திற்கு ஒப்படைக்க வேண்டும்.
⦁ ஜுன் மாதம் 25 ஆம் திகதியளவில் மாகாண கல்வி திணைக்களத்தின் ஊடாக அந்த நூல்கள் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
⦁ முதற்கட்டத்தில் தேர்ந்தெடுக்கும் 10,000 நூல்கள் இலத்திரனியல் நூலாக இலத்திரனியல் நூலகத்தில் உள்வாங்க செய்யப்படும்.
⦁ தகைமைப் பெற்ற பரிந்துரை குழுவொன்றின் ஊடாக சிறந்த 100 நூல்கள் தேர்ந்தெடுத்து அச்சிடப்பட்டு அந்த நூல்களுக்கு அரச விருதும் வழங்கி வைக்கப்படும். இந்த நூல்களை அச்சிடுவதற்கு கல்வி அமைச்சும் இலங்கை தேசிய நூலகமும் இணைந்து நடவடிக்கை எடுக்கும்  

இந்த நடவடிக்கைக்கான அனைத்து தொடர்பாடல்களும் முன்னெடுப்பது கல்வி அமைச்சும் இலங்கை தேசிய நூலகமும் ஆகும்.